கேரளம்: முகக்கவசம், சமூக இடைவெளியுடன் தேர்வெழுதிய மாணாக்கர் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கேரளம்: முகக்கவசம், சமூக இடைவெளியுடன் தேர்வெழுதிய மாணாக்கர்

கேரளம்: முகக்கவசம், சமூக இடைவெளியுடன் தேர்வெழுதிய மாணாக்கர் 
கேரளம்: முகக்கவசம், சமூக இடைவெளியுடன் தேர்வெழுதிய மாணாக்கர்

திருவனந்தபுரம்: 

முகக் கவசம், சமூக இடைவெளியுடன் கேரள மாநிலத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு இன்று நடைபெற்ற பொதுத் தேர்வை 13 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்னர். 

நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் கேரளத்தில் ஒத்திவைக்கப்பட்ட பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கி நடைபெற உள்ளது. 

 எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வை 4,78 லட்சம் பேரும், பனிரெண்டாம் வகுப்பில் தொழில்முறைக் கல்விக்கான தேர்வை 56,345 பேரும் எழுதினர். பனிரெண்டாம் வகுப்புக்கான தேர்வு நாளை தொடங்க உள்ளது. 

முன்னதாக அனைத்துத் தேர்வு மையங்களும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டன. 

மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. காய்ச்சல் உள்ளிட்ட லேசான அறிகுறிகள் இருப்பவர்கள் கூட தனியாக அமரவைக்கப்பட்டு தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment

Please Comment