தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் வெப்பச் சலன த்தால் அடுத்த 2 நாட்களுக்கு கோவை, நீலகிரி, ராமநாதபுரம், விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும். சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறை வடைந்த 24 மணி நேரத்தில் பதி வான மழை அளவுகளின்படி அதிக பட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் 11 செமீ, குழித்துறை, சிவலோகம் ஆகிய இடங்களில் தலா 8 செமீ, கொட்டாரத்தில் 7 செமீ, கன்னியாகுமரியில் 6 செமீ, திருநெல்வேலி மாவட்டம் ஆயக் குடியில் 5 செமீ மழை பதிவானது.
வெப்பநிலையை பொறுத்த வரை மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், சேலம், தருமபுரி, வேலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் திரு வள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி ஆகிய பகுதிகளில் அடுத்த 2 நாட் களுக்கு 104 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி பதிவாக வாய்ப்பு உள்ளது. நேற்று அதிகபட்சமாக சேலத்தில் 105 டிகிரி, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் தலா 104 டிகிரி வெயில் பதிவானது.
No comments:
Post a Comment
Please Comment