மாணவர்களுக்கான ‘லிட்டில் ஃபார்மர்’ விவசாய முகாம் மே 14-ல் தொடங்குகிறது
‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், டிஹெச்ஐ பவுண்டேஷன் சார்பில் பள்ளி மாணவர்களுக்காக நடத் தும் ‘லிட்டில் ஃபார்மர்’ எனும் 4 நாள் விவசாய முகாம் வரும் மே 14 முதல் தொடங்க உள்ளது.
கரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பள்ளி மாணவர் களுக்காக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பல்வேறு செயல்பாடு களை முன்னெடுத்து வருகிறது. வீட்டிலிருந்தபடியே இணையம் வழியாக பங்கேற்க முடிவதால், இதில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங் கேற்று வருகின்றனர்.
அந்த வகையில், டிஹெச்ஐ பவுண் டேஷன் உடன் இணைந்து பள்ளி மாணவர்களுக்கான விவசாய முகாம் வரும் மே 14 முதல் 17-ம் தேதி வரை 4 நாளுக்கு தினமும் மாலை 5 மணிமுதல் 6 மணிவரை ஒரு மணிநேரம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் வீட்டுத் தோட்டம் அமைத்தல், இயற்கை விவசாய அறிமுகம், விவசாய வகைகளும் கூறுகளும், சமை யலறை விவசாயம், விவசாய பயிற்சிகள் குறித்து விளக்கிச் சொல்லப்படும். தினமும் வீட்டுத் தோட்டம் தொடர்பான செயல்பாடுகளும் வழங்கப்படும்.
முகாம் முடிவில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட செயல்பாட்டைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த முகாமில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். ஒவ் வொரு மாணவரும் அவருடைய அம்மாவுடன் இந்த முகாமில் பங்கேற்க வேண்டும். 4-ம் நாள் முகாமில் மாணவர்களின் தாய் மட்டும் பங்கேற்க வேண்டும். இதில், வீட்டுத் தோட்டம் அமைப்பது பற்றிய கூடுதலான தகவல்கள் வழங்கப்படும்.
இந்த முகாமில் டிஹெச்ஐ பவுண்டேஷன் நிறுவனரும் வேளாண் அறிஞருமான டாக்டர் திவ்யா வாசுதேவன் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான பல்வேறு ஆலோசனைகளை வழங்கவிருக்கிறார்.
இந்த முகாமில் பங்கேற்க செல்போன் இருந்தாலே போதும். இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் பதிவுக் கட்டணமாக ரூ.399/- செலுத்த வேண்டும். https://connect.hindutamil.in/agricamp.php என்ற இணைய தளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment
Please Comment