'விகடன் கல்வி வெபினாரி'ல் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு நிபுணர்களின் பதில்கள்
'விகடன் கல்வி வெபினாரி'ல் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு நிபுணர்களின் பதில்கள்
ஆனந்த விகடன் சார்பில் ' மெகா டிஜிட்டல் கல்வி எக்ஸ்போ' காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இரண்டு பகுதிகளாக நடைபெற்றது. இந்த வெபினாரில் மாணவர்களும் பெற்றோரும் கேட்ட கேள்விகளுக்கு சிறப்பு பேச்சாளர்கள் பதிலளித்தனர். அந்த கேள்வி பதில்கள் இதோ:
Dr. சி.சைலேந்திரபாபு, ஐ.பி.எஸ், டி.ஜி.பி, ரயில்வே & இயக்குநர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை.
1. IPS அதிகாரியாக, காவல்துறையில் பணிபுரிய உடல்தகுதி அவசியமா?
அறிவு சார்ந்து இயங்கும் பிரிவுகள் உள்ளனவா?
"IPS படிப்பதென்பது சிவில் சர்வீஸோடு சேர்ந்து வருவதுதான். மேலும் உடல்தகுதி என்பது மட்டுமே காவல்துறைக்கு பிரதானமானதல்ல. உடல் ஆரோக்கியம்தான் மிக அவசியம். காவல்துறைக்குள் பணிக்குவர சில பயிற்சிகள் அளிக்கப்படும். அந்த பயிற்சிகளை மேற்கெள்ள உடல் ஆரோக்கியம் அவசியம். அடிப்படையான உயரம், எடை போன்றவை தேவை. காவல்துறை என்பது Ivestigation சார்ந்த ஒன்று. இங்கு அறிவைக்கொண்டு இயங்குவதுதான் பிரதானம். தொழில்நுட்ப அறிவு சார்ந்த துறைகள் காவல்துறையில் ஏராளம் உண்டு. Forensic, CBI, Crime Branch எனப் பலதுறைகள் உண்டு."
2. சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராக 3 அடிப்படை விஷயங்களை சொல்ல முடியுமா?
"1. பொது அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். தினசரி உலக நடப்புகளை அறிந்துகொள்ள செய்திதாள்களை வாசிப்பது அவசியம்.
2. கட்டுரை எழுத பழகிக்கொள்ள வேண்டும். சிவில் சர்வீஸ் தேர்வில் கட்டுரை எழுதுவது அவசியமான ஒன்று. ஆழமான கட்டுரைகளை எழுத பழகவேண்டும்.
3. செய்ய முடியாது , கடினமானது என நினைப்பதை முதலில் செய்யுங்கள். கடினமான பாடம் என உங்களுக்குத் தோன்றும் பாடத்தை முதலில் படித்துமுடியுங்கள். "
3. எனக்கு விருப்பமான படிப்பைத் தேர்வு செய்வதா, இல்லை பெற்றோர் சொல்லும் படிப்பைத் தேர்வுசெய்வதா?
"உங்களுக்கு எதில் திறமை இருப்பதாக நீங்கள் நம்புகிறீர்கள் என்பதை முடிவுசெய்யுங்கள். அதற்கேற்ற படிப்பைத் தேர்வுசெய்யுங்கள். அது எந்த துறையாக இருந்தாலும் சரி, அதில் உங்கள் கவனத்தையும், உழைப்பையும் செலுத்துங்கள்.
பெற்றோர்களிடம் உங்கள் எதிர்கால கனவை, படிப்பைத் தெரிவியுங்கள். உங்களின் நல்ல கனவுகளை அவர்கள் மறுக்கமாட்டார்கள். உடன் நிற்பார்கள்.
4. மனவலிமை பெறுவதற்கு எப்படி?
"
மனவலிமை என்பது படிப்படியாக நாம் வளர்த்துக் கொள்ளவேண்டிய ஒன்று. பிரச்னைகளை சந்திக்க வேண்டும். சந்தித்து அவற்றை துணிச்சலாக எதிர்கொள்ள வேண்டும். உலகில் சாதித்த பலரும் பிரச்னைகளை எதிர்கொண்டு முன்னேறியவர்கள்தாம். அவமானங்களைக் கடந்து வந்தவர்கள்தாம். அந்த அவமானத்தின்போது மனவலிமையை அதிகப்படுத்தியவர்கள்.உங்கள் இலக்கை நோக்கி முன்னேறுங்கள்.
ஒரு புத்தகம் எழுத முதலில் ஒரு பக்கத்திலிருந்துதான் தொடங்க வேண்டும். பிறகு தினந்தினம் எழுதும் பக்கங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவோம். போலவே, வ்வொரு நாளும் உங்களின் இலக்கு நோக்கிய தொடர்ச்சியான உழைப்புதான் உங்களின் மனவலிமையை அதிகப்படுத்தும். "
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..!
அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
No comments:
Post a Comment
Please Comment