11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை எப்போது நடைபெறும்? - பள்ளிக் கல்வித்துறை தகவல் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை எப்போது நடைபெறும்? - பள்ளிக் கல்வித்துறை தகவல்

11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை எப்போது நடைபெறும்? - பள்ளிக் கல்வித்துறை தகவல் 


பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் வரும் ஜூன் 15ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. தேர்வு முடிவுகள் ஜூலை 15 ஆம் தேதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 



 எனவே ஜூலை மூன்றாவது வாரத்தில் இருந்து, தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதனிடையே இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என்றும், மீறி செயல்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். 




தனியார் பள்ளிகளில் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்க மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளதாகவும், துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

Please Comment