இனி ‘தூய்மை பணியாளர்கள்’ என அழைக்கப்படுவர் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

இனி ‘தூய்மை பணியாளர்கள்’ என அழைக்கப்படுவர்

அனைத்து துப்புரவு பணியாளர்களும் இனி ‘தூய்மை பணியாளர்கள்’ என அழைக்கப்படுவர் முதல்வர் அறிவிப்பு அரசாணையாக வெளியீடு 

சென்னை 

தமிழகத்தில், சென்னை மாநகராட்சியில் 6,398 துப்புரவு பணியாளர்கள், நகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள 14 மாநகராட்சி களில் 15,510 துப்புரவு பணியாளர்களும், 121 நகராட்சிகளில் 16,288 துப்புரவு பணி யாளர்களும், பேரூராட்சி நிர்வாகத்தின் கீழ் 528 பேரூராட்சிகளில் 6,450 துப்புரவு பணியாளர்களும் என 44,646 துப்புரவு பணியாளர்களும் உள்ளனர். 


மேலும் ஊரக வளர்ச்சித் துறையின்கீழ், 26,404 துப்புரவு பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பொது இடங்களில் தூய் மையை காப்பது, இயற்கை சீற்றங்களின் போது தூய்மை பணிகளை மேற்கொள் வது என பொதுசுகாதாரத்தையும், மக்கள் நலனையும் பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். 

இவர்களின் செயல்பாடுகளை கவுரவிக்கவும், நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலும், நகர்ப்புற, ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றும் அனைத்து துப்புரவு பணியாளர்களையும் தூய்மை பணியாளர்கள் என அழைப்பதற்கு உரிய ஆணையை வெளியிடும்படி நகராட்சி நிர்வாக ஆணையர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் ஆகியோர் அரசை கேட்டுக் கொண்டனர். 


 இந்நிலையில், அனைத்து துப்புரவு பணியாளர்களும் இனி தூய்மை பணி யாளர்கள் என அழைக்கப்படுவார்கள் என்று கடந்த மார்ச் 19-ம் தேதி சட்டப் பேரவையில் 110- விதியின்கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்ததைத் தொடர்ந்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment