மாணவர்களுக்காக 2-வது வானியல் முகாம் (Registration Link Available) - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மாணவர்களுக்காக 2-வது வானியல் முகாம் (Registration Link Available)

‘இந்து தமிழ் திசை’, ‘ஸ்பேஸ் சயின்ஸ் லேர்னிங் கிளப்’ சார்பில் பள்ளி மாணவர்களுக்காக 2-வது வானியல் முகாம்: மே 13-ம் தேதி தொடங்குகிறது (Registration Link Available)   

மாணவர்கள், பெற்றோரிடம் கிடைத்த வெற்றி மற்றும் அவர்களது வேண்டுகோளைத் தொடர்ந்து, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘ஸ்பேஸ் சயின்ஸ் லேர்னிங் கிளப்’ இணைந்து பள்ளி மாணவர்களுக்காக 3 நாள் வானியல் முகாம் 2-வது முறையாக மே 13-ல் ஆரம்பிக்க உள்ளது. 

 கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு நடைமுறையில் உள்ளநிலையில், பள்ளி மாணவர்களுக் காக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பல்வேறு செயல்பாடுகளை இணையதளம் மூலமாக முன்னெடுத்து வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக, ‘ஸ்பேஸ் சயின்ஸ் லேர்னிங் கிளப்’புடன் இணைந்து பள்ளி மாணவர்களுக்கான வானியல் முகாமை ‘இந்து தமிழ் திசை’ கடந்த மே 6-ம் தேதி முதல் 8-ம் தேதி (நேற்று) வரை மூன்று நாட்கள் நடத்தியது. வானியல் விவரங்கள் ஆன்லைன் வழியாக நடந்த இந்த வானியல் முகாமில் 4-ம்வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள மாணவ, மாணவிகள் கலந்துகொண்டர். 

வானியல் பயிற்சியாளர் வினோத்குமார் கலந்துகொண்டு வானியல் குறித்த அடிப்படை தகவல்கள், வானத்தில் நிகழும் முக்கிய மாற்றங்கள், பிரபஞ்சம், பால்வெளி மண்டலம், கோபர்நிகஸ், கலிலியோ உள்ளிட்ட வானியலாளர்களின் கோட்பாடுகள், தொலைநோக்கி வருகைக்குப் பிறகு வானியல் துறையில் ஏற்பட்ட மாற்றங்கள், வெவ்வேறு காலண்டர் முறை ஆகியவற்றைப் பற்றி விளக்கிக் கூறினார். 

 கடந்த 3 நாட்களாக நடந்த வானியல் முகாம் நேற்று நடந்து முடிந்தது. இதில், 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், அவர்களது பெற்றோர் ஆர்வத்துடன் பங்கேற்று, பல்வேறு கேள்விகளை கேட்டு, அதற்கான தெளிவான பதில்களைப் பெற்றனர் 

  மாணவர்கள் வேண்டுகோள் 

 வீட்டைவிட்டு வெளியே எங்கும்செல்ல முடியாத நேரத்தில் இந்தஆன்லைன் முகாம் மிகவும் பயனுடையதாகவும், சுவாரஸ்யமாகவும் இருந்ததாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கூறினர். இந்நிலையில், இந்த முகாமில் பங்கேற்க ஏராளமான மாணவ,மாணவிகள் தொடர்ந்து விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அவர்களது வேண்டுகோளுக்கேற்ப, இரண்டாவது வானியல்முகாமுக்கு தற்சமயம்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த வானியல் முகாம் வரும் 13-ம் தேதி ஆரம்பித்து 15-ம் தேதி வரை 3 நாட்கள் நடக்க உள்ளது. பிரதி தினமும் காலை 10 மணி முதல் 11 மணி வரை வானில் முகாம் நடைபெறும் இதில் பங்கேற்க மொபைல் போன் இருந்தாலே போதுமானது. 

ஆன்லைன் முகாமில் பங்கேற்க.. 

 வானியல் தொடர்பான தகவல்கள், வானியல் ஆராய்ச்சிகள் பற்றிய இந்த முகாமை ‘ஸ்பேஸ்சயின்ஸ் லேர்னிங் கிளப்’ நிறுவனர் திரு வினோத்குமார்  அவர்கள் நடத்துகிறார். இதில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் பதிவுக் கட்டணமாக ரூ.249/- செலுத்த வேண்டும். https://connect.hindutamil.in/Astronomy.php என்ற இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். நன்றி.

No comments:

Post a Comment

Please Comment