SSLC பொது தேர்வு அட்டவணை எப்போது வெளியிடப்படும்? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
சென்னை, மே.9-
SSLC பொதுத்தேர்வு அட்டவணை எப்போது வெளியிடப்படும்? என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் தன்னுைடய ‘டுவிட்டர்’ பக்கத்தில் பதிவு தெரிவித்துள்ளார்.
SSLC பொதுத்தேர்வு
கொரோனா ஊரடங்கு நிமித்தமாக, கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கி நடைபெற இருந்த SSLC. பொதுத் தேர்வை தமிழக அரசு தள்ளிவைத்தது. இது தவிர பிளஸ்-1 பொதுத் தேர்வின் இறுதி நாள் தேர்வும் தள்ளிவைக்கப்பட்டது.
தள்ளிவைக்கப்பட்ட SSLC. பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுமா? என்று பலரும் பேசி வந்த நிலையில், அந்த தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் பதில் அளித்திருந்தார். இருப்பினும், சில கல்வியாளர்கள், கல்வி சார்ந்த அமைப்புகள் SSLCபொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அதற்கு மாற்றாக சில கருத்துகளையும் முன்வைத்து வருகின்றனர்.
அட்டவணை
இந்த குழப்பங்களின் மத்தியில் மாணவர்கள் SSLC. தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இருப்பினும் தேர்வு எப்போது நடைபெறும்? என்பது குறித்து அரசு முன்வந்து விளக்க வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர் கோரிக்கையும் விடுக்கின்றனர்.
இதனிடையில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் நேற்று ஒரு செய்தியை பதிவிட்டு இருந்தார். அதில் அவர், ‘ SSLC. பொதுத்தேர்வு உறுதியாக நடைபெறும். உயர்மட்டக்குழு கூட்டத்துக்கு பின், ஜூன் மாத இறுதிக்கு பிறகு பொதுத்தேர்வு கால அட்டவணையை அறிவிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல், CBSE. 10-ம் வகுப்பு தேர்வு எப்போது நடக்கும்? என்று எதிர்பார்த்திருந்த மாணவர்களுக்கும் தேர்வு குறித்த அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே மாணவ மாணவிகளே பொது தேர்வு கட்டாயம் நடைபெறும், தேர்வுக்கு தயாராகுங்கள்.
No comments:
Post a Comment
Please Comment