தினம் ஒரு தகவல் மேஜிக் நிபுணர் டைனமோ - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தினம் ஒரு தகவல் மேஜிக் நிபுணர் டைனமோ

தினம் ஒரு தகவல் மேஜிக் நிபுணர் டைனமோ 

 பறப்பதற்கும் தண்ணீரில் நடப்பதற்கும் எல்லோருக்கும் ஆசை தான். ஆசை இருந்தாலும் அதை செயல்படுத்த எல்லோராலும் முடியாதே. ஒரு சிலரால்தான் அற்புதங்களை நிகழ்த்த முடிகிறது. அப்படி ஒருவர் 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ந்தேதி லண்டன் தேம்ஸ் நதியின் மீது நடந்து சென்று மக்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தார். அவர் டைனமோ என்னும் புகழ்பெற்ற மேஜிக் நிபுணர் ஆவார். 

இதை போல மக்களை பரவசத்தில் ஆழ்த்தும் பல நிகழ்ச்சிகளை இவர் நடத்தியுள்ளார். ஒரு முறை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள உயரமான டைம்ஸ் கட்டிடத்தின் பக்கவாட்டு சுவரில் நடந்தே தரைக்கு இறங்கியுள்ளார். சாதாரண மனிதன் நினைத்தே பார்க்க முடியாத சாகச செயல்களை அநாயசமாக செய்து காட்டியுள்ளார், டைனமோ. ஒரு சேனலில் ஒளிபரப்பான இவரது மேஜிசியன் இம்பாஸிபிள் நிகழ்ச்சியை 24 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இதற்கு சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சி விருதும் இருமுறை கிடைத்துள்ளது. 

இந்த நிகழ்ச்சி டி.வி.டி வடிவில் விற்பனையானபோதும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இவையெல்லாம் இவரது திறமைக்கு சான்றுகள். ரசிகர்களால் டைனமோ என அழைக்கப்படும் ஸ்டீவன் பிரேய்ன் இங்கிலாந்தில் உள்ள பிராட்போர்டில் 1982-ல் பிறந்தார். இவரது தந்தை அடிக்கடி குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறைக்கு சென்றுவிடுவாராம். 

எனவே தாயின் பராமரிப்பில்தான் வளர்ந்து வந்திருக்கிறார். தந்தையின் இடத்தில் இருந்து இவரை பார்த்துக்கொண்டவர் இவருடைய தாத்தாவான கென். இவர் தான் டைனமோவின் ரோல் மாடல். இவரும் சிறு அளவிலான மந்திர தந்திர வித்தைகளில் ஈடுபட்டவர். இவரிடம் இருந்து தான் மாயாஜால வித்தைகளை டைனமோ கற்றுக்கொண்டுள்ளார். 

 தொடக்க காலத்தில் ஸ்டீவன் சீட்டு கட்டுகளை வைத்து பல தந்திர விளையாட்டுகளில் ஈடுபட்டு காண்போரை கவர்ந்திருக்கிறார். இவருக்கு பிடித்த கதாநாயக பாத்திரங்களில் ஒன்று சூப்பர் மேன். டைனமோ பிரபலமான மேஜிக் நிபுணரானபோது தன்னையும் சூப்பர் மேன் போல் நினைத்துக்கொண்டே தந்திர நிகழ்ச்சிகள் ஈடுபட்டதா சொல்கிறார். 

 வாலிப வயதில் வந்த குடல் அழற்சி நோயின் பாதிப்பையும் மீறி ரசிகர்கள் தந்த உற்சாகத்தால் தொடர்ந்து சாகச நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளார் டைனமோ. சாதாரணமாக வீதியில் மாயாஜால நிகழ்ச்சிகளை நடத்தி வந்த இவருக்கு இப்போது உலகம் முழுவதிலும் ரசிகர்கள் உள்ளனர்.

No comments:

Post a Comment

Please Comment