200 ஆண்டுகளுக்குப் பின் தென்பட்ட ‘அதிசயம்’ - ThulirKalvi Blogs

Latest

Search This Site

200 ஆண்டுகளுக்குப் பின் தென்பட்ட ‘அதிசயம்’

200 ஆண்டுகளுக்குப் பின் தென்பட்ட ‘அதிசயம்’



சுவிட்சர்லாந்தின் ஜூரா பிராந்தியத்தில் நீண்ட நெடுங் காலத்துக்குப் பிறகு ‘கோல்டன் ஈகிள்’ எனப்படும் பொன்னாங்கழுகு தென்பட்டதாக பறவையியல் ஆய்வாளர் ஒருவர் ஆச்சரியத்துடன் தெரிவித்திருக்கிறார். 

 குறிப்பிட்ட பறவையியல் ஆய்வாளர் மார்ஷியல் பாரின், ஜூரா பிராந்தியத்தில் இந்தக் கழுகு மனிதர்களின் பார்வையில்பட்டு 200 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதாகக் கூறுகிறார். 

 அந்தப் பறவையைக் கண்களால் கண்டது உணர்ச்சிமிகுந்த தருணம் என்று சொன்ன அவர், ஆல்ப்ஸ் பகுதியில் இருந்து இடம் பெயர்ந்துள்ள அந்தக் கழுகை இனிமேல் ஜூரா பகுதியில் அடிக்கடி காண முடியும் என்று நம்புவதாகத் தெரிவித்துள்ளார். 

 சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் காணப்பட்ட இந்தக் கழுகு தற்போது ஜூரா பிராந்தியத்தில் முதல் முறையாக தென்பட்டதை தான் ஆவணப்படுத்தியுள்ள தாகவும் மார்ஷியல் பாரின் கூறியிருக்கிறார். 

 வால்லி டு டோப்ஸ் பகுதியில் அதுபோன்ற இரண்டு கழுகுகளை தான் பார்த்துள்ள தாகக் கூறும் பாரின், தொடர்ந்து பல நாட்களாக அந்தப் பகுதியில் அப்பறவைகள் உணவு வேட்டை யாடுவதைக் கண்டுள்ளதாகவும் கூறுகிறார். 

 இரு நூற்றாண்டுகளுக்கு முன் ஜூரா பகுதியில் பரவலாகக் காணப்பட்ட பொன்னாங்கழுகு, மனிதர்களின் நடவடிக்கைகளாலே அங்கிருந்து ஆல்ப்ஸ் பகுதிக்கு இடம்பெயர்ந்தன. தற்போது மீண்டும் அவை ஜூரா பகுதிக்குத் திரும்பியுள்ளன. அவை அங்கேயே தங்கிவிடுமா அல்லது மீண்டும் ஆல்ப்ஸ் பகுதிக்குத் திரும்பி விடுமா என்று உறுதியாகக் கூற முடியாது என பாரின் சொல்கிறார். 

 ஆனால் உணவுச்சங்கிலி மோசமாக மாறியுள்ள காரணத் தாலேயே பொன்னாங்கழுகுகள் ஜூரா பிராந்தியத்துக்குத் திரும்பியுள்ளதாக பெர்ன் பல்கலைக்கழக ஆய்வாளர் ஒருவர் கூறியிருக்கிறார்.

No comments:

Post a Comment

Please Comment