‘கேங்மேன்’ பணி ஆணைகள் வழங்க நடவடிக்கை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

‘கேங்மேன்’ பணி ஆணைகள் வழங்க நடவடிக்கை

‘கேங்மேன்’ பணி ஆணைகள் வழங்க நடவடிக்கை

கேங்மேன்‘ தேர்வு முடிவுகளை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. பணி ஆணைகள் வழங்குவது குறித்து கோர்ட்டு உத்தரவு வெளியான பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி கூறினார். 

அமைச்சர் தங்கமணி பேட்டி நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

 வடசென்னை அனல் மின்நிலையத்தை பொருத்தவரை பணிகள் முடிந்து, ஜூன் மாதத்தில் திறப்பதாக இருந்தது. 

கொரோனா தாக்கத்தால் 3, 4 மாதங்கள் தாமதமாகிவிட்டது. ஊரடங்கு முடிந்தபிறகு வருகிற டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்திற்குள் அது திறக்கப்படும். இதன்மூலம் 800 மெகாவாட் மின்உற்பத்தி கிடைக்கும். 

மற்ற அனல் மின்நிலையங்கள் அமைக்கும் திட்டப்பணிகள் 2023-24-ம் ஆண்டில் முடிவடையும். தற்போது ஊரடங்கு தளர்வையடுத்து தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. முழுமையாக ஆலைகள் செயல்படும்போது 17 ஆயிரம் மெகாவாட் தேவை இருந்தாலும் அதனை மின்வாரியம் அளிக்கும். இருந்தபோதிலும், தற்போது மின்நுகர்வு குறைவாகவே உள்ளது. 

3 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு மின்உற்பத்தி அதிகமாகவே நம்மிடம் உள்ளது. ‘கேங்மேன்’ தேர்வு ‘கேங்மேன்‘ தேர்வு முடிவுகளை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. பணி ஆணைகள் வழங்குவது குறித்து கோர்ட்டு உத்தரவு வெளியான பிறகு, இதன்மீது நடவடிக்கை எடுக்கப்படும். 


No comments:

Post a Comment

Please Comment