மாணவர்கள் ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகளை பயில்வதற்கு பல்கலைக்கழக மானியக்குழுவான யுஜிசி ஒப்புதல்... - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மாணவர்கள் ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகளை பயில்வதற்கு பல்கலைக்கழக மானியக்குழுவான யுஜிசி ஒப்புதல்...

மாணவர்கள் ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகளை பயில்வதற்கு பல்கலைக்கழக மானியக்குழுவான யுஜிசி ஒப்புதல்... 

மாணவர்கள் ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகளை பயில்வதற்கு பல்கலைக்கழக மானியக்குழுவான யுஜிசி ஒப்புதல் அளித்துள்ளது.மாணவர்கள் ஒரே நேரத்தில் இரு பட்டப்படிப்புகள் படிக்கும் நடைமுறை கடந்த 2016ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. 

அதாவது, ஒரே நேரத்தில் ஒரு பல்கலையில் முழு நேரமாகவும், அதே பல்கலை அல்லது வேறொரு பல்கலை.,,யில் தொலைதூர கல்வி, ஆன்லைன் மூலமாகவோ மற்றொரு டிகிரிகளை மாணவர்கள் படித்தால், ஏதேனும் ஒன்றே செல்லுபடியாகும்.


இந்நிலையில், நாளுக்குள் நாள் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில், பட்டப்படிப்புடன் சேர்த்து திறன் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுத்து படிப்பதற்கு மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் ஏற்கனவே இருந்த ஒரே நேரத்தில் இரு டிகிரிகள் படிக்கும் நடைமுறைக்கு யுஜிசி ஒப்புதல் அளித்துள்ளது.

No comments:

Post a Comment

Please Comment