ஒரேநேரத்தில் 2 பட்டப்படிப்புகளை படிக்க யுஜிசி அனுமதி
வேலைவாய்ப்பை உறுதிசெய்யும் விதமாக மாணவர்கள் ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகளை படிப்பதற்கு அனுமதி தர யுஜிசி திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து யுஜிசி உயரதிகாரிகள் கூறியதாவது:
ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகள் படிக்கும் நடைமுறை 2016-ம் ஆண்டுடன் நிறுத்தப்பட்டது. அதாவது ஒரே காலக்கட்டத்தில் 2 படிப்புகளை ஒருவர் முடித்திருந் தால் ஏதாவது ஒன்று மட்டுமே செல்லுபடியாகும்.
தற்போது இளைஞர்கள் நலன்கருதி அந்த தடையை நீக்க முடிவாகியுள்ளது. இனி ஒரு கல்லூரி, பல்கலை.யில் படிக்கும் மாணவர், மற்றொரு கல்வி நிறுவனத்தில் தொலைநிலைக் கல்வி அல்லது இணையதள வழியில் திறன் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த படிப்பு களை தேர்வுசெய்து படிக்கலாம்.
இதன்மூலம் 3 ஆண்டுகளில் ஒரு மாணவர் 2 பட்டங்களை பெறு வதுடன் வேலைவாய்ப்பும் துரிதமாக கிடைக்கும்.
இதுதொடர்பாக ஆராய்ந்து பரிந் துரைகள் வழங்க யுஜிசி துணைத்தலைவர் பூஷன் பட்வர்தன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு தரும் ஆய்வறிக்கை யின்படி இரட்டை பட்டப்படிப்பு குறித்த அறிவிப்பை விரைவில் மத்திய அரசு வெளியிடும். இந்த விவகாரத்தில் பொது மக்களிடமும் கருத்துகள் கேட்கப்படும்.
இவ்வாறு யுஜிசி உயரதிகாரிகள் கூறினர்.
No comments:
Post a Comment
Please Comment