விடைத்தாள் திருத்த பணியை கண்காணிக்க 5 இணை இயக்குநர்கள் நியமனம்
விடைத்தாள் திருத்துதல் பணிகளை கண்காணிக்க 5 இயக்குநர்களுக்கு கூடுதல் பொறுப்பு அளித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப் பட்ட பிளஸ் 2 விடைத்தாள் திருத்துதல் பணிகள் வரும் மே 27-ம் தேதி தொடங்க உள்ளன.
இதற்கான முன்னேற்பாடுகள் மண்டலவாரியாக பிரிக்கப்பட்டு மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலை யில் திருத்துதல் பணிகளை கண்காணிக்க 5 இணை இயக்குநர்களை பள்ளிக்கல்வித் துறை நியமித்துள்ளது.
அதன்படி பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குநர்கள் நாகராஜ முருகன், ராஜேந்திரன், சுகன்யா,வாசு, கோபிதாஸ் ஆகியோர் மாவட்டவாரியாக கண் காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இதற்காக ஒவ்வொரு இயக்குநருக்கும் தலா 6 முதல் 7 மாவட்டங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. மேலும், பொதுத்தேர்வுக் கான ஏற்பாடுகளையும் கண்காணித்து பணிகளை தீவிரப்படுத்த இணை இயக்குநர்களுக்கு கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுதவிர போதுமான பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் திருத்துதல் பணியில் அனைத்து முது நிலை ஆசிரியர்களும் பங்கேற்க தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
அதேநேரம் மாற்றுத் திறனாளிகள், இதயமாற்று அறுவை சிகிச்சை செய்த வர்கள், ஆஸ்துமா நோய் உள்ளவர் களுக்கு மட்டும் மருத்துவ ஆவணங் களின் அடிப்படையில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்து விலக்களிக்கலாம் என்றும் தேர்வுத் துறை கூறியுள்ளது.
No comments:
Post a Comment
Please Comment