பிளஸ்-2 ஜூன் மாத இறுதியில் தேர்வு முடிவு வெளியாக வாய்ப்பு?
சென்னை,
மே.28-
பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள், கொரோனா நோய்த்தொற்று தாக்குதல் அதிகமாக இருக்கும் சென்னை மாவட்டத்தை தவிர, பிற பகுதிகளில் நடைபெறும் என்று அரசு தெரிவித்தது. அதன்படி, சமூக இடைவெளி விடைத்தாள் திருத்தும் மையங்களில் பின்பற்றப்பட வேண்டும் என்ற நோக்கில், கூடுதலாக மையங்கள் அமைக்கப்பட்டு 201 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணிகள் நேற்று தொடங்கியது.
இப்பணியில் ஈடுபட வந்த ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் உடல்வெப்பம் பரிசோதிக்கப்பட்டு, பின்னர் முக கவசம் வழங்கப்பட்டது. முதன்மை தேர்வர்கள் 5 ஆயிரத்து 373 பேர் நேற்று விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர். இன்று (வியாழக்கிழமை) 32 ஆயிரத்து 735 முதுநிலை ஆசிரியர்கள் பணியில் ஈடுபட இருக்கின்றனர்.
ஆக மொத்தம் விடைத்தாள் திருத்துவதற்கு 38 ஆயிரத்து 108 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த பணிகள் அடுத்த மாதம் (ஜூன்) 9-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. அதன் பின்னர், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. அடுத்த மாதம் இறுதியில் தேர்வு முடிவுகளை வெளியிட கல்வித்துறை திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
No comments:
Post a Comment
Please Comment