மாணவர்கள் இருக்கும் பகுதியிலேயே தேர்வு எழுதலாம்
சி.பி.எஸ்.இ.
10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு
மாணவர்கள் இருக்கும் பகுதியிலேயே தேர்வு எழுதலாம்
மத்திய மந்திரி அறிவிப்பு
கொரோனா பாதிப்பை தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12 வகுப்புகளுக்கு சில பாடங்களுக்கான பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன. அந்த தேர்வுகள் வருகிற ஜூலை 1-ந் தேதி தொடங்கி 15-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
ஊரடங்கின் காரணமாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டதால் மாணவர்கள் பலர் வெளிமாநிலங்கள் அல்லது வெளிமாவட்டங்களுக்கு சென்று இருப்பார்கள் என்பதால், அவர்கள் அங்கு தாங்கள் இருக்கும் பகுதியில் உள்ள மையங்களிலேயே தேர்வை எழுதிக் கொள்ளலாம் என்றும், இதற்காக முன்பு தேர்வு எழுதிய மையங்களுக்கு செல்ல வேண்டிய தேவை இல்லை என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் அறிவித்து உள்ளார்.
இதற்காக பதிவு செய்தல் உள்ளிட்ட நடைமுறைகள் தொடர்பான அறிவிப்பை சி.பி.எஸ்.இ. வெளியிடும் என்றும் அவர் கூறி இருக்கிறார்.
No comments:
Post a Comment
Please Comment