மாணவருக்கான வானியல் முகாம் 3-வது முகாம் மே 25-ல் தொடக்கம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மாணவருக்கான வானியல் முகாம் 3-வது முகாம் மே 25-ல் தொடக்கம்

ஸ்பேஸ் சயின்ஸ் லேர்னிங் கிளப்’ -‘இந்து தமிழ் திசை’ நடத்தும் மாணவருக்கான வானியல் முகாம் 3-வது முகாம் மே 25-ல் தொடக்கம் 

இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘ஸ்பேஸ் சயின்ஸ் லேர்னிங் கிளப்’ உடன் இணைந்து பள்ளி மாணவர் களுக்கான ஆன்லைன் வானியல் முகாமை 3-வது முறையாக நடத்த உள்ளது.

இம்முகாம் வரும் 25-ம் தேதி தொடங்குகிறது. ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், பள்ளி மாணவர்களுக் காக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பல்வேறு செயல்பாடுகளை இணையம் வழியாக முன்னெ டுத்து வருகிறது. 



அதன் ஒரு பகுதி யாக, ‘ஸ்பேஸ் சயின்ஸ் லேர்னிங் கிளப்’புடன் இணைந்து பள்ளி மாணவர்களுக்கான வானியல் முகாமை ‘இந்து தமிழ் திசை’ கடந்த வாரங்களில் 2 முறை நடத்தியது. ஆன்லைன் வழியாக நடத்தப் பட்ட இந்த முகாம்களில் 4-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையி லான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 

இதில், வானியல் பயிற்சியாளரும், ‘ஸ்பேஸ் சயின்ஸ் லேர்னிங் கிளப்’ நிறுவனரு மான வினோத்குமார் கலந்து கொண்டு வானியல் குறித்த விவரங் கள், வானில் நிகழும் முக்கிய நிகழ்வுகள், பிரபஞ்சம், பால்வெளி மண்டலம், கோபர்நிகஸ், கலிலியோ உள்ளிட்ட வானியலாளர்களின் கோட்பாடுகள், தொலைநோக்கி வருகைக்குப் பிறகு வானியல் துறையில் ஏற்பட்ட மாற்றங்கள், வெவ்வேறு காலண்டர் முறை ஆகியவற்றை விளக்கிக் கூறினார். இதில், 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், அவர்களது பெற்றோர் பங்கேற்று, பல்வேறு கேள்விகளை எழுப்பி, அதற்கான பதில்களைப் பெற்றனர். 



இந்நிலையில், இந்த 2 முகாம் களிலும் பங்கேற்க முடியாமல் போன மாணவர்களின் வேண்டு கோளுக்கேற்ப 3-வது முகாம் வரும் 25, 26, 27 ஆகிய 3 நாட்கள் நடத்தப்பட உள்ளது. தினமும் மதியம் 3 மணி முதல் 4 மணி வரை நடைபெறும். இந்த முகாமை வினோத்குமார் நடத்துகிறார். இதில் பங்கேற்க செல்போன் இருந்தாலே போதும். முகாமில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் https://connect.hindutamil.in/Astronomy.php என்ற இணைய தளத்தில் ரூ.249 கட்டணம் செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும். கூடுதல் விவரங்க ளுக்கு 90039 66866 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Please Comment