கடன் தவணை தள்ளிவைப்பு பயன் தராது 6 மாதத்துக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்
பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பொதுத் துறை, தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்களில் பெறப்பட்ட அனைத்து வகை கடன்களுக்கான மாதத் தவணை செலுத்துவதை ஆகஸ்ட் வரை மேலும் 3 மாதங்களுக்கு ஒத்திவைத்து ரிசர்வ் வங்கி ஆணையிட்டுள்ளது.
இருப்பினும் இது முழு தீர்வு அல்ல. வீட்டுக் கடன் பெற்ற ஒருவர் மாதம் ரூ.50,000 வீதம் 3 மாதங்களுக்கு தவணை செலுத்தாமல் இருப்பதாகவும், அவருக்கு இன்னும் 15 ஆண்டு தவணைக் காலம் இருப்பதாகவும் வைத்துக் கொள்வோம்.
அவர் கடன் தவணைக் காலத்தில் கூடுதல் வட்டியாக ரூ.4 லட்சத்து 9,500 செலுத்த வேண்டியிருக்கும்.
எனவே மார்ச் 31-ம் தேதி உள்ள நிலுவைத் தொகைக்கு மட்டும், மாதக் கடன் தவணை வசூலிக்குமாறு வங்கிகளுக்கு மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் ஆணையிட வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
Please Comment