புதிதாக தேர்வு செய்யப்பட்ட காவலர்களுக்கு 3 நாள் பயிற்சி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

புதிதாக தேர்வு செய்யப்பட்ட காவலர்களுக்கு 3 நாள் பயிற்சி

கரோனா தடுப்பு களப்பணிக்காக புதிதாக தேர்வு செய்யப்பட்ட காவலர்களுக்கு 3 நாள் பயிற்சி முறையான 6 மாத பயிற்சி பின்னர் அளிக்கப்படும் 

 தமிழ்நாடு காவல் துறைக்கு 5,496 காவலர்கள் அண்மையில் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். முறையான 6 மாத பயிற்சிக்குப் பின் இவர்கள் பணிக்கு அனுப் பப்பட இருந்தனர். கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் அனைத்து பகுதிகளிலும் சோதனைச் சாவடிகள் அமைத்து வாகனம் மற்றும் மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் போலீ ஸார் ஈடுபட்டு வருகின்றனர். 

 இப்பணிகளை மேற்கொள்ள காவல் துறைக்கு கூடுதல் ஆட்கள் தேவைப்படுகின்றனர். எனவே, புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள காவலர்கள் உடனடியாக பணியில் சேருமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட் டுள்ளது. இதன்படி, திருச்சி மாந கரம், மத்திய மண்டல காவல் துறைக்கென ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ள 16 பெண் காவலர்கள் உட்பட 521 பேருக்கு திருச்சி கிராப்பட்டியிலுள்ள சிறப்புக் காவல்படை மைதானத்தில் இன்று (மே 3) முதல் 3 நாட்கள் தொடக்க நிலை பயிற்சி அளிக் கப்படஉள்ளது. 

 அதன்பின் இவர்கள் நேரடியாக கரோனா தடுப்பு களப்பணியில் ஈடுபடுத்தப்படுவர். கரோனா தொடர்பான பணிகள் முடிவடைந்த பிறகு, இவர்கள் முறைப்படி 6 மாத பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 

கரூரில் 54 காவலர்களுக்கு... 

 கரூர் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் ரா.பாண்டியராஜன் கூறியபோது, “2-ம் நிலை காவலர் பணிக்கு தேர்வானவர்களில் 54 பெண் காவலர்களுக்கு மே 5-ம் தேதி முதல் 2 வாரங் களுக்கு தொடக்க நிலை பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதன்பின், கரோனா தடுப்பு பணியில் இவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்” என்றார்.

No comments:

Post a Comment

Please Comment