மானசரோவர், முக்திநாத் யாத்திரை மானியம் பெற விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்க வலியுறுத்தல் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மானசரோவர், முக்திநாத் யாத்திரை மானியம் பெற விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்க வலியுறுத்தல்

மானசரோவர், முக்திநாத் யாத்திரை மானியம் பெற விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்க வேண்டும் தமிழக அரசுக்கு அறநிலையத் துறை வலியுறுத்தல் 

 மானசரோவர், முக்திநாத் புனித யாத்திரை முடித்தவர்கள் மானியம் பெற விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்க அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு இந்து சமய அற நிலையத் துறை ஆணையர் பணீந் திர ரெட்டி கடிதம் எழுதியுள் ளார். 



சீனாவில் உள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்தில் உள்ள முக்தி நாத் ஆகிய திருத்தலங்களுக்கு சென்று புனித யாத்திரை முடித் தவர்களுக்கு இந்து சமய அறநிலை யத் துறையின் சார்பில் ஆண்டு தோறும் மானியம் வழங்கப்படும். இதன்படி, 2019-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடப்பு ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் புனித யாத்திரை முடித்த யாத்ரீகர்கள் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் விண்ணப் பிக்க வேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. 

அதன் பிறகு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மார்ச் 25-ம் தேதியில் இருந்து நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், புனித யாத்திரை முடித்த வர்கள் மானியத்தைப் பெற விண் ணப்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், மானசரோவர் மற்றும் முக்திநாத் புனித யாத்திரை முடித்தவர்கள் மானியம் பெற விண்ணப்பிப்பதற்கான கால அவ காசத்தை நீட்டிக்க அனுமதி கேட்டு இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் க.பணீந்திர ரெட்டி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

 இதுதொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 30-ம் தேதி வரை தான் புனித யாத்திரை முடித்தவர்களிடம் இருந்து விண் ணப்பங்களைப் பெற வேண்டும் என்று அரசாணை உள்ளது. 



எனவே, அரசாணையில் இருந்து விலக்கு அளித்து கால அவகா சத்தை நீட்டிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று துறையின் ஆணையர் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அரசின் முடிவைப் பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Please Comment