34 வகையான கடைகள் இயங்க அனுமதி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

34 வகையான கடைகள் இயங்க அனுமதி

34 வகையான கடைகள் இயங்க அனுமதி

தமிழகம் முழுவதும் சிறிய அளவிலான நகை, ஜவுளி விற்பனையகங்கள் உட்பட 34 வகையான கடைகள் இயங்க அனுமதி சலூன், ஸ்பா, பியூட்டி பார்லர்களுக்கு தடை நீடிப்பு ஊரடங்கு தளர்வையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள குளிர் சாதன வசதி இல்லாத சிறிய நகைக் கடைகள், கூரியர் மற்றும் பார்சல் சர்வீஸ், லாரி புக்கிங் சர்வீஸ், பெட்டிக் கடைகள் உட்பட 34 வகை யான கடைகளைத் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அதே நேரம் சலூன்கள், ஸ்பா, பியூட்டி பார்லர்களை திறக்கப்பதற்கான தடை நீடிக்கிறது. 



  இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

 தமிழகத்தில் கரோனா நோய் தொற்றைத் தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் அமலில் உள்ளது. கடந்த 2-ம் தேதி தமிழக அமைச்சர வைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவுரைகளின்படியும் பெருநகர சென்னை காவல்துறையின் எல் லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் பிற மாவட்டங்களில் பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது. 

 அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் (நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகள் தவிர) பல செயல்பாடு கள், பணிகள் இன்று முதல் (மே 11) குறிப்பிட்ட நேரத்தில் செயல்பட அனுமதி அளிக்கப்படுவது தொடர் பாக மே 9-ம் தேதி அறவிப்பு வெளியிடப்பட்டது. 

  திறக்கப்படும் கடைகள் 

அந்த அறிவிப்பில் பிற தனிக் கடைகள் பிரிவில் திறக்கப்படும் கடைகளின் விபரம் வருமாறு: 
 1. டீக்கடைகள் (பார்சல் மட்டும்). 

 2. பேக்கரிகள் (பார்சல் மட்டும்). 

 3. உணவகங்கள் (பார்சல் மட்டும்). 



 4. பூ, பழம், காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள். 

 5. கட்டுமானப் பொருட்கள் விற் கும் கடைகள்.

 6. சிமென்ட், ஹார்டுவேர், சானி டரிவேர் விற்கும் கடைகள். 

 7. மின் சாதனப் பொருட்கள் மற் றும் பழுது நீக்கும் கடைகள். 

 8. மொபைல் போன் விற்கும் மற்றும் பழுதுநீக்கும் கடைகள். 

 9. கணினி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள். 

 10. வீட்டு உபயோக இயந்திரங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடைகள். 

 11. மோட்டார் இயந்திரங்கள் மற் றும் பழுது நீக்கும் கடைகள். 12. கண்கண்ணாடி மற்றும் பழுது நீக்கும் கடைகள். 

 13. சிறிய நகைக் கடைகள் (குளிர் சாதன வசதி இல்லாதவை). 14. சிறிய ஜவுளிக் கடைகள் (குளிர் சாதன வசதி இல்லாதவை) ஊரக பகுதிகளில் மட்டும்.

 15. மிக்ஸி, கிரைண்டர் பழுது நீக்கும் கடைகள். 



 16. டிவி விற்பனை மற்றும் டிவி பழுது நீக்கும் கடைகள். 

 17. பெட்டிக் கடைகள்.

 18. பர்னிச்சர் கடைகள். 

 19. சாலையோர தள்ளுவண்டி கடைகள். 

 20. உலர் சலவையகங்கள். 21. கூரியர் மற்றும் பார்சல் சர்வீஸ். 22. லாரி புக்கிங் சர்வீஸ். 

 23. ஜெராக்ஸ் கடைகள். 

 24. இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன விற்பனை நிலையங்கள். 25. இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன பழுது நீக்கும் கடைகள். 26. நாட்டு மருந்து விற்பனை கடைகள். 

 27. விவசாய இடுபொருட்கள் மற் றும் பூச்சி மருந்து விற்பனை கடைகள். 

 28. டைல்ஸ் கடைகள். 

 29. பெயின்ட் கடைகள். 

 30. எலக்ட்ரிகல் கடைகள். 

 31. ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் விற்பனை கடைகள். 32. நர்சரி கார்டன்கள். 

 33. மரக்கடைகள் மற்றும் பிளைவுட் கடைகள். 



 34. மரம் அறுவை நிலையங்கள். 

  தடை தொடரும் கடைகள் 

 1. முடி திருத்தும் நிலையங்கள் (சலூன்கள்). 

 2. ஸ்பா. 

 3. பியூட்டி பார்லர்கள். 

 ஊரடங்கு தளர்வின்போது ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட பணிகள், கடைகள் தொடர்ந்து இயங்கும். மேலும், கரோனா நோய்த் தொற்று தன்மையைப் பொறுத்து வருங்காலங்களில் பல்வேறு பணிகள், கடைகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்படும். 

கண்காணிக்க உத்தரவு 

 மேற்குறிப்பிட்ட கடைகளின் உரிமையாளர்கள், குளிர்சாதன வசதி இருந்தால் அதை இயக்கா மல், கடைக்கு வரும் வாடிக்கை யாளர்களிடம் தனிநபர் இடை வெளியை பின்பற்ற அறிவுறுத்து வதோடு, கிருமி நாசினிகள் பயன் படுத்துவதையும் உறுதி செய்ய வேண்டும். 

 மேலும், அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் மாநகராட்சி ஆணையாளர்களும் காவல் துறையினரும் அரசால் அறிவுறுத் தப்பட்ட மேற்சொன்ன கடைகள், நிறுவனங்களில் பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்யவும், தனிநபர் இடைவெளி பின் பற்றப்படுவதையும், போதுமான கிருமிநாசினிகளை பயன்படுத்தி பணிபுரிவதையும் கண்காணிக்க வேண்டும். 

 மேலும், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதையும் அரசால் வெளி யிடப்பட்டுள்ள நிலையான செயல் பாட்டு வழிமுறைகளை தீவிரமா கக் கடைபிடிப்பதையும் கண் காணிக்க வேண்டும். கரோனா நோய்த் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும், தனியார் நிறு வனங்களும் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.தமிழக அரசு அறிவிப்பு


No comments:

Post a Comment

Please Comment