வட தமிழக மாவட்டங்களில்
3 நாட்களுக்கு அனல் காற்று வீசும்
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
வடதமிழக மாவட்டங்களில் மேலும் 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை மையம் அறிவித் துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பால சந்திரன், செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
‘உம்பன்’ புயலால் தமிழக பகுதிகளில் காற்று வீசும் முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதன் காரணமாக கடல் காற்று நிலத்தை நோக்கி வீசுவதற்கு பதிலாக, ஈரப்பதம் குறைந்த வெப்பமான நிலக்காற்று, மேற்கு, வடமேற்கு திசையில் இருந்து வடதமிழகம் வழியாக கடலை நோக்கி வீசுகிறது.
இதனால் வட தமிழக மாவட்டங்களில் அனல் காற்று வீச வாய்ப்புள்ளது. எனவே இப்பகுதி பொதுமக்கள் அடுத்த 3 நாட்களுக்கு காலை 11.30 முதல் மாலை 3.30 மணி வரை வெளியில் வேலை செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
திருத்தணியில் 109 டிகிரி
நேற்று மாலை 5.30 மணி வரை பதிவான வெப்பநிலை அளவு களின்படி அதிகபட்சமாக திருத் தணியில் 109, சென்னை விமான நிலையத்தில் 108, சென்னை நுங்கம்பாக்கம், மதுரை விமான நிலையம், திருச்சி, வேலூர், கரூர் பரமத்தி ஆகிய இடங்களில் தலா 106, கடலூரில் 104, தருமபுரி யில் 103, புதுச்சேரி, சேலத்தில் 102, நாமக்கல்லில் 101, நாகப்பட் டினத்தில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
No comments:
Post a Comment
Please Comment