‘இந்து தமிழ் திசை’, ‘எஸ்ஐபி அபாகஸ்’ சார்பில்
மாணவருக்கான 2-வது அபாகஸ் முகாம்
ஆன்லைனில் நாளை தொடங்குகிறது
‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘எஸ்ஐபி அபாகஸ்’ (SIP Abacus) சார்பில் பள்ளி மாணவர்களுக்காக ஆன்லைனில் நடத்தும் 2-வது அபாகஸ் முகாம் நாளை (மே 23) தொடங்குகிறது.
ஊரடங்கு அமலில் உள்ள நிலை யில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பள்ளி மாணவருக்காக ஆன்லைன் வழியாக வானியல் முகாம், அபா கஸ் முகாம், விவசாய முகாம், எதிர்கால உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான உரையா டல் (Webinar) என பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில், ‘எஸ்ஐபி அபாகஸ்’ உடன் இணைந்து மாணவர்களுக்கான அபாகஸ் முகாம் கடந்த 16 முதல் 3 நாட்கள் நடைபெற்றன.
இதில் பங்கேற்க முடியாமல் போன மாணவர்களின் வேண்டு கோளுக்கேற்ப, 2-வது அபாகஸ் முகாம் நாளை (மே 23) தொடங்கி 3 நாட்களுக்கு தினமும் மாலை 5 6 மணிவரை நடைபெறவுள்ளது.
2 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் இதில் பங்கேற்கலாம்.
செயலி மூலம் கற்றுக்கொள்ள செல்போ னும், ZOOM APP வழியாக நேரடி யாகப் பங்கேற்க லேப்டாப்பும் அவசியம் இருக்க வேண்டும்.
இதற்கு பதிவுக் கட்டணமாக ரூ.294/- செலுத்தி https://connect.hindutamil.in/abacus.php என்ற இணையத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவ ரங்களுக்கு 9791605238 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
No comments:
Post a Comment
Please Comment