‘அபியாஸ்’ செயலி அறிமுகம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

‘அபியாஸ்’ செயலி அறிமுகம்

நீட், ஜேஇஇ தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்க ‘அபியாஸ்’ செயலி அறிமுகம் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தகவல் 

நீட், ஜேஇஇ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்கள் இல வச உயர்தர பயிற்சி மேற்கொள்ள ‘அபியாஸ்’ என்ற செயலி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

ஜேஇஇ, நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளை எழுதத் தயாராகும் மாணவர்களுக்கு உயர்தர மாதிரித் தேர்வுகளை நடத்தி, அதன்மூலம் அவர்களுக்கு பயிற்சி வழங்க ‘தேசிய தேர்வுக்கான பயிற்சி (அபியாஸ்)’ என்ற செயலியை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. 

இந்தச் செயலி ஸ்மார்ட்போன், கணினியில் பயன்படுத்துவதற்கு ஏது வாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மாண வர்கள் இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்தபின்பு, சில அடிப்படை விவரங் களை அதில் பதிவு செய்ய வேண்டும்.

 மாதிரித் தேர்வுகள் 

இந்தச் செயலியில் தேசிய தேர்வு முகமை சார்பாக தினமும் ஒரு மாதிரி தேர்வு நடக்கவுள்ளது. மாதிரி தேர்வுத் தாள்களைப் பதிவிறக்கம் செய்த பின்பு, இணையதள பயன்பாடு இல்லா மலேயே பதில் அளிக்கலாம். பின்னர் பதில் அளித்ததை சமர்ப்பித்து தங்க ளுடைய செயல் திறனை மாணவர்கள் சோதித்து பார்க்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment