2019 20 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் கடைசி தேதி ஜூலை 31 இல் இருந்து நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
புதுடெல்லி பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றும்போது பொருளாதாரத்தை மீட்டு வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் இந்த நிதியிலிருந்து சிறு குறு நடுத்தரத் தொழில்களை மேம்படுத்த அனைத்து தரப்பினரின் நலனுக்காகவும் சிறப்பு திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்கள் எவை என்பது குறித்து விரிவான விவரங்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார்,
அவர் கூறுகையில் 2019 20 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31 ஆம் தேதி இறுதி நாளாக இருந்தது ஆனால் தற்போது அந்த காலக்கெடு மேலும் நான்கு மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது
இதனால் வருமான வரி தாக்கல் கடைசி தேதி ஜூலை 31 ஆம் தேதி நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Please Comment