டிடிஎஸ் பிடித்தம் வரி விகிதம் குறைப்பு - நிர்மலா சீதாராமன் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

டிடிஎஸ் பிடித்தம் வரி விகிதம் குறைப்பு - நிர்மலா சீதாராமன்

டிடிஎஸ் பிடித்தம் வரி விகிதம் குறைப்பு - நிர்மலா சீதாராமன் 



புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது, பொருளாதாரத்தை மீட்டும் வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் இந்த நிதியில் இருந்து சிறு, குறு நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் அனைத்து தரப்பினரின் நலனுக்காகவும் சிறப்பு திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார். 

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்கள் எவை என்பது குறித்த விரிவான விவரங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். 

 அப்போது அவர் கூறுகையில்:- டிடிஎஸ் பிடித்தம் வரி விகிதம் 25 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரி விகிதம் குறைப்பு நாளை முதல் அமலுக்கு வருகிறது. நாளை முதல் அடுத்த ஆண்டு மார்ச் வரை டிடிஎஸ் வரி விதிப்பு குறைக்கப்படுகிறது. இதன் மூலம் மக்களின் கைகளில் சுமார் 50 ஆயிரம் கோடி அளவிற்கு பணப்புழக்கம் இருக்கும்.

No comments:

Post a Comment

Please Comment