உண்டு, உறைவிட பள்ளிகளில் உள்ள
விடுதிகளில் 50 சதவீத மாணவர்கள் மட்டுமே தங்க உத்தரவு
பழங்குடியினர் நல இயக்குனர் டி.ரிட்டோ சிரியாக் அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிட பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
விடுதிகளில் சமையல் அறை, மாணவர்கள் தங்கும் அறைகள், கழிவறைகள் மற்றும் படுக்கை அறைகள் அடிக்கடி கிருமிநாசினி கொண்டும் சுத்தம்செய்ய வேண்டும்.
விடுதிகளிலும், பள்ளிகளிலும் சமூக இடைவெளியை தவறாது பின்பற்றப்பட வேண்டும்.
குடிப்பதற்கு உகந்த சுடு தண்ணீர் அல்லது காய்ச்சி ஆற வைக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும்.
விடுதியில் ஒரு அறையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் 50 சதவீதம் மாணவர்கள் மட்டுமே தங்கவேண்டும்.
மாணவர்கள் தங்குவதற்கு மேலும் அதிகமான இடம் தேவைப்பட்டால் வகுப்பறையில் தங்கிட உரிய வசதிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Please Comment