மாணவி திலகவதி, 8-ம் வகுப்பு, புனித மரி அன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செங்கல்பட்டு.
மாணவ-மாணவிகளை அழகாக எழுத வைப்பது ஆசிரியர்களுக்கு சவாலாக இருக்கிறது. பேனா அல்லது பென்சிலை லாவகமாகப் பிடித்து, காகிதத்தின் மீது மென்மையாக அழுத்தி, சரியான திசையில் எழுதக் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.
இதைத் தொடர்ந்து அன்றாடம் எழுதுவதன் மூலம் கையெழுத்து படிப்படியாக முன்னேற்றம் அடையும். அடித்தல் திருத்தல் இன்றி, இடைவெளி விட்டு தெளிவாகவும், திருத்தமாகவும் எழுதப் பழகிக்கொள்ள வேண்டும்.
வரிக்கு வரி விடும் இடம் போன்றவை கையெழுத்தின் தோற்றத்தை மாற்றுகின்றன.
இப்படி தொடர்ந்து எழுதினால் எல்லோராலும் அழகான கையெழுத்தில் எழுத முடியும்.
அழகான கையெழுத்தானது பார்க்கும் அனைவரையுமே சந்தோஷப்படுத்தும். எல்லோரது பாராட்டையும் எல்லா நேரத்திலும் பெற்றுத்தரும்.
அந்த பாராட்டானது உங்களுக்கு மகிழ்ச்சியை தருவதோடு மட்டுமின்றி தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும்.
தேர்வுகளில் அதிக மதிப்பெண்பெற அழகான கையெழுத்தும் துணையாகிறது.
No comments:
Post a Comment
Please Comment