5 மாவட்ட கல்வி அதிகாரிகள் பதவி உயர்வுடன் இடமாற்றம்
பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு
தமிழக பள்ளிக் கல்வித் துறையில் 5 மாவட்ட கல்வி அதிகாரிகள் பதவி உயர்வுடன் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளதா வது:
முதன்மை கல்வி அதிகாரியாக
பள்ளிக் கல்வித் துறையில் மாவட்ட கல்வி அதிகாரிகள் 5 பேர் தற்காலிகமாக முதன்மை கல்வி அதிகாரியாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி
திண்டிவனம் மாவட்ட கல்வி அதிகாரி கே.கிருஷ்ணவேணி கள்ளக்குறிச்சி முதன்மை கல்வி அதிகாரியாகவும்,
சேலம் (ஊரகம்) மாவட்ட கல்வி அதிகாரி ஆர்.மதன்குமார் ராணிப்பேட்டை முதன்மை கல்வி அதிகாரியாகவும்,
மண்டபம் (ராமநாதபுரம்) மாவட்ட கல்வி அதிகாரி கே.பாலதண்டாயுதபாணி தேனி முதன்மை கல்வி அதிகாரியாகவும் பதவி உயர்வில் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்.
அதேபோல, காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அதிகாரி பி.மகேஸ்வரி, லால்குடி மாவட்ட கல்வி அதிகாரி ஆர்.அறிவழகன் ஆகியோருக்கு தொடக்கக் கல்வி துணை இயக்குநர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள் ளது.
இததவிர, திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆர்.பூபதி ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குநராகவும்,
அப்பணியிடத்தில் இருந்த ச.செந்தில் முருகன் திருநெல்வேலி முதன்மை கல்வி அதிகாரியாகவும் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

No comments:
Post a Comment
Please Comment