ஊரடங்கு உத்தரவால் பள்ளிக்கூடங்கள் மூடல் மதிய உணவுக்கான தொகையை (Amount of food) மாணவர்களுக்கு
வழங்கும் உ.பி. அரசு
ஆர்.ஷபிமுன்னா புதுடெல்லி நாடு முழுவதிலும் உள்ள மாநிலங்
களின் அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு மதிய உணவு Lunch இலவசமாக
அளிக்கப்படுகிறது. மத்திய அரசின் உதவித்தொகை )Central government scholarships) யுடன் துவக்கப்பள்ளிகள் மற்றும்
நடுநிலைப்பள்ளிகளில் அன்றாடம் மதிய உணவு அளிக்கப்படுகிறது.
கரோனா வைரஸ் பரவலை
தடுக்க அமலான ஊரடங்கால் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப் பட்டிருந்தது.
இதனால் அந்த ஊரடங்கு நாட் களில் குழந்தைகளுக்கு மதிய உணவு (Lunch) பள்ளிகளில் அளிக்கப்
படவில்லை.
இதையொட்டி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் சார்பில் ஊரடங்கின்
துவக்கத் தில் ஒரு அறிவிக்கை வெளியிடப் பட்டிருந்தது.
அதில், தேசிய உணவுப்
பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பேரிடர் உள்ளிட்ட நாட்களில் பள்ளிகளில் அளிக்க
முடியாத மதிய உணவை மாணவர்களின் வீடுகளில் அளிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இதை அதற் கான மதிப்புள்ள தொகையாக அளிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட் டிருந்தது.
இதையடுத்து, கேரளா உள் ளிட்ட ஒருசில மாநிலங்களில் மாண வர்களின் வீடுகளுக்கே சென்று
மதிய உணவு வழங்கப்பட்டது.
சமைக்க முடியாத நாட்களில் அதற் கான உணவுப்பொருட்களும்
மாணவர்களின் வீடுகளில் விநி யோகிக்கப்பட்டன. இது தொடர் பான ஒரு வழக்கு உச்ச
நீதிமன்றத் தில் வந்த போதும் மதிய உணவு விநியோகத்தில் கேரளாவின் செயல்பாடுகள்
பாராட்டப்பட்டன. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்
அரசு மதிய உணவு அளிக்கப்படாத நாட்களில் அதன் மதிப்பை கணக்கிட்டு தேசிய உணவுப்
பாதுகாப்புச் சட்டத்தின்படி யான தொகையாக( In sum ) அளிக்க முடிவு செய்துள்ளது.
இதற்கான அறி
விப்பை உத்தரப்பிரதேச மாநில அரசு நேற்று வெளியிட்டிருந்தது. அதில், முதல்கட்டமாக
ஊரடங்கு நாட்கள் 76 எனக் கணக்கிடப் பட்டுள்ளது. இந்த நாட்களுக்காக துவக்கப்பள்ளி
மாணவர்களுக்கு ரூ.374 அளிக்கப்பட உள்ளது.
இதே தொகை நடுநிலைப்பள்ளிகளுக்கு ரூ.561 என
அளிக்கப்படுகிறது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படியான தொகையாக இதற்கான
பணம் பள்ளி மாண வர்களின் பெற்றோர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என வும்
தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளியின் தலைமை ஆசிரி யர்கள் மாணவர்களின் பெற்றோர் அல்லது
பாதுகாவலர்களின் பெயர் களை உறுதி செய்ய வேண்டும்,
பிறகு வங்கிக் கணக்குகளின் விவ
ரங்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இதன்பின் உத்தரப்பிரதேச
மாநில அரசின் வருவாய்துறை சார்பில் அனைத்து மாணவர்களின் பெற் றோர்களுக்கும் உணவுப்
பாது காப்புத் தொகை (Food security amount) அனுப்பி வைக்கப் பட உள்ளது.
பள்ளிகளின் கோடைவிடுமுறை
நாட்களிலும் இந்த தொகையை வழங்கிட உத்தரப்பிரதேச அரசு திட்டமிடுகிறது.
No comments:
Post a Comment
Please Comment