கற்றல் பாதிப்புகள் (Learning Impacts) குறித்து ஆராயும் வல்லுநர் குழுவில் கூடுதலாக 4 உறுப்பினர்கள்
சேர்ப்பு
கற்றல், கற்பித்தலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட
வல்லுநர் குழுவில் கூடுதலாக 4 உறுப்பினர்களை நியமித்து பள்ளிக்கல்வித் துறை
உத்தரவிட்டுள்ளது.
கரோனா வைரஸால் தமிழகத்தில் கடந்த மார்ச் 17-ம் தேதி முதல்
பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், நோய்த் தொற்றின் தீவிரம்
தணியாததால் வரும் கல்வி ஆண்டுக்கான வகுப்புகளை தொடங்குவதிலும் தாமதம்
ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ஊரடங்கால் பள்ளிக் கல்வியில் கற்றல், கற்பித்தலில்
ஏற்பட்டுள்ள பாதிப்புகள்,(Learning Impacts) பள்ளிகள் திறப்பு தாமதம் உள் ளிட்ட விவகாரங்கள் குறித்து
ஆராய்ந்து பரிந் துரைகளை வழங்க பள்ளிக்கல்வி ஆணையர் சிஜி தாமஸ் வைத்தியன் தலைமையில்
12 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப் பட்டுள்ளது.
அந்தக் குழுவில் தற்போது
கூடுதலாக 4 உறுப்பினர்கள் சேர்க்கப் பட்டுள்ளனர். இதுகுறித்து பள்ளிக்கல்வி
முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
பள்ளிக்கல்வியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு களை ஆராய 12 பேர் கொண்ட வல்லுநர் குழு
அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது இக்குழுவில் கூடுதல் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்
என அரசுக்கு பள்ளிக்கல்வி ஆணையர் பரிந்துரை வழங்கினார். அதையேற்று கல்வியாளர்கள்
ஜெ.அஜீத் பிரசாத் ஜெயின், பி.ஆர்.வேலுமணி, சிபிஎஸ்இ பள்ளிகள் கூட்டமைப்பு தலைவர்
சி.எஸ்.மனோகரன், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய முன்னாள் உறுப்பினர்
சுந்தரபரிபூரணன் பக் ஷிராஜன் ஆகியோர் குழுவில் கூடுதல் உறுப்பினர்களாக சேர்க்கப்
பட்டுள்ளனர்.
மேலும், இக்குழுவின் ஆய்வறிக் கையை சமர்பிப்பதற்கான அவகாசமும் ஒரு
வாரம் நீட்டிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Please Comment