விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவுறுத்தல் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவுறுத்தல்

விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவுறுத்தல் 
விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவுறுத்தல்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் என்ன என்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் அறிவுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை.

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் அரசுப் பேருந்துகள் தனியார் வாகனங்களில் அழைத்து வரப்படுவார்கள்.

மாவட்டம் விட்டு மாவட்டம் பணிக்குச் செல்பவர்களுக்கு அரசு வாகனம் ஏற்படுத்தி தரப்படும். 

விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு வெளிமாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் உள்ள இடங்களில் இருந்து வந்து செல்லும் ஆசிரியைகளுக்கு ஆன்லைன் அனுமதி சீட்டு தேவையில்லை 

அடையாள அட்டைகளை அடிப்படையில் அனுமதிக்கப்படும் 

நோய்த்தொற்று காரணமாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் உள்ள ஆசிரியர், பணியாளர் களின் வீடுகள் இருந்தால் அவர்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணிகளில் விலக்கு அளிக்கப்படுகிறது. 

இதனை சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களுக்கு ஆசிரியர்கள் முன்னதாக தெரிவிக்க வேண்டும் 

அந்த இடங்களில் மற்ற ஆசிரியர்கள், பணியாளர்களை கொண்டு பணிகள் நடத்தப்படவேண்டும் 

தேர்வு அறைகளுக்கு உள்நுழையும் போது வெளியே வரும்போதும் ஆசிரியர்கள், பணியாளர்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக கிருமிநாசினி திறந்து வைக்கப்பட வேண்டும். 

ஆசிரியர்கள் மற்றும் தேர்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் அதனைக் கொண்டு கைகளை சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.

மேலும் தேர்வு விடைத்தாள்களை தொடுவதற்கு முன்பு ஆசிரியர்கள் பணியாளர்கள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது அவசியம்.

 அது போல முக கவசம் அணிந்து இருக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment