கிராமப்புற மாணவர்களுக்காக அரசு கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள்
கிராமப்புற மாணவர்கள் விரும்பிய பாடப்பிரிவை படிப்பதற்காக தமிழக அரசு கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக அவர் தனது கட்டுரைப் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு
சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவி காலம் மே 27-ஆம் தேதி நிறைவடைகிறது இதையடுத்து தேர்தல் குழு அமைக்கப்பட்டு மே 31ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்படும்
பெயர் பட்டியல் அடிப்படையில் புதிய துணைவேந்தரை ஆளுநர் தேர்வு செய்வார். தற்போது அரசு கல்லூரிகளில் போதுமான அளவு வகுப்பு அறைகள் கட்டப்பட்டுள்ளன.
மேலும் தேவையான கட்டடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன விரைவில் அரசு கல்லூரிகளில் ஒரு நாளைக்கு ஒரு கட்டமாக மாணவர்கள் காலை 9.30 மணி முதல் மாலை 4,30 மணி வரை மட்டும் கல்லூரிக்கு சென்று பயிலும் நிலை உருவாகும்.
கிராமப்புற மாணவர்கள் விரும்பிய பாடப்பிரிவில் படிப்பதற்காக தமிழக அரசு கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது என அவர் பதிவிட்டுள்ளார்,
No comments:
Post a Comment
Please Comment