போட்டித் தேர்வுக்கு தயாராகுவோம் : உலக அதிசயங்கள் அறிவோம்
கி.மு. 2-ம் நூற்றாண்டுக்குப் பின் வந்த அலெக்சாண்டிரியனின் காலத்தில், பழங்காலத்தின் 7 அதிசயங்கள் வரையறுக்கப்பட்டன.
பழங்காலத்தின் ஏழு அதிசயங்களின் பட்டியலை உருவாக்கியவர், கிடோவின் ஆன்டிபட்டரே.
கிரேக்கர்கள் எண் 7-ஐ புனிதமானதாகவும், ராசியானதாகவும் கருதியதால் உலக அதிசயங்கள் ஏழாகத் தொகுக்கப்பட்டன.
எகிப்திய பிரமிடுகள் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை.
பாபிலோன் தொங்கு தோட்டம் கி.மு. 6-ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது.
பாபிலோன் தொங்கு தோட்டத்தை அமைத்த அரசர், இரண்டாம் நொபுகாத் நாஸர்.
ஆர்டிமிஸ் ஆலயம் வேட்டை மற்றும் நிலவுக்கான கிரேக்க தெய்வமான ஆர்டிமிசுக்காக எழுப்பப்பட்டது.
கி.பி. 3-ம் நூற்றாண்டில் கோத்துகள் படையெடுத்தபோது ஆர்டிமிஸ் ஆலயம் தகர்க்கப்பட்டது.
ஆர்டிமிஸ் ஆலயத்தின் துண்டுப் படிமங்கள் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் மியூசியத்தில் உள்ளன.
கலோஸஸ் ஆப் ரோடிஸ் என்பது கிரேக்கக் கடவுளான ஹூலியஸஸ்ஸின் 32 அடி உயர வெண்கலச் சிலை.
கிரேக்க நாட்டில் ரோடிஸ் துறைமுகத்தில் கி.மு. 305-293-ல் ஹூலியஸ் சிலை உருவாக்கப்பட்டது.
தற்கால உலக அதிசயங்கள் எவை என்பதில் கருத்து வேறுபாடு உண்டு.
தற்கால உலக அதிசயங்கள் பட்டியல் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது.
இந்தியாவில் உள்ள தாஜ்மகால் நவீன உலக அதிசயங்களில் ஒன்றாக இடம் பிடிக்கிறது.

No comments:
Post a Comment
Please Comment