சீப்பு தோன்றிய வரலாறு அறிவோம்
தலைமுடியை அழகாக வாரி, சிகை அலங்காரம் செய்ய ‘சீப்பு’கள் பயன்படுகின்றன. சீப்பு, தற்கால நாகரிக மனிதனின் கண்டுபிடிப்பல்ல. சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளாகவே மனிதன் சீப்புகளை பயன்படுத்துகிறான் என்பதற்கான சான்றுகள் உள்ளன.
எலும்பில் இருந்து உருவாக்கப்பட்ட சீப்புகள் கி.மு. 8 ஆயிரம் ஆண்டிலேயே ஸ்காண்டிநேவியாவில் புழக்கத்தில் இருந்துள்ளது. இரு பக்கமும் பற்களைக் கொண்ட சீப்புகளை எகிப்தியர்கள் பயன்படுத்தி உள்ளனர்.
எலும்பு தவிர தந்தம், மரம் ஆகியவற்றிலும் சீப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளன. சீனப் பெண்கள் மரத்திலான சீப்புகளை முடியிலேயே சூடிக் கொள்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.
இதனால் அழகிய அலங்காரத்துடன் சீப்புகள் தயாரிக்கப்பட்டன. பூவேலை, பறவை, விலங்கு சின்னங்கள் உருவாக்கப்பட்ட சீப்புகள் சீன ஆண்-பெண்களால் அணியப்பட்டன. அமெரிக்காவில் 1760-களில் ஆமை ஓட்டில் செய்யப்பட்ட சீப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இங்கிலாந்தில் வில்லியம் பண்டி என்பவர் 1796-ல் வரிசையாக பற்களை உருவாக்கும் ரம்பத்தை கண்டுபிடித்தார். சீப்புகளின் பற்களை எளிதாக உருவாக்க இந்த இயந்திரம் பயன்பட்டது.
இந்த இயந்திரத்தை உருவாக்கியவர்தான் துணிகளை உருவாக்கும் எந்திரத்தையும் உருவாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1862-ல் பர்மிங்காமைச் சேர்ந்த வேதி ஆய்வாளர் அலெக்சாண்டர் பார்க்ஸ், ஒரு புதிய பொருளை கண்டுபிடித்தார். அது பார்கிஸைன் எனப்பட்டது. இதில் அவர் சீப்பு உருவாக்கி அசத்தினார். இவர் கண்டுபிடித்த மூலப்பொருள்தான் பின்னாளில் ‘பிளாஸ்டிக்’ என அழைக்கப்பட ஆரம்பித்தது.
No comments:
Post a Comment
Please Comment