பெற்றோருக்கு 'வாட்ஸ் ஆப்' குழு துவங்க மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை
பெற்றோருக்கான கல்வி, 'வாட்ஸ் ஆப்' குழுவை துவக்க வேண்டும்' என, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, தொடக்க கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.தமிழக தொடக்க கல்வி இயக்ககத்தின் செயல்பாடுகள், அறிவுரைகள் மற்றும் பிற தகவல்கள் பெற்றோர்களுக்கு உடனடியாக சென்றடையும் வகையில், பள்ளி கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதில், பெற்றோருக்கான, கல்வி, 'வாட்ஸ் ஆப்' குழுவும் ஒன்று. இந்த குழுவை உடனடியாக ஏற்படுத்த, தொடக்க கல்வி இயக்ககம், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது: தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், தலைமையாசிரியர் குழு (வட்டார அளவில்), பட்டதாரி இடைநிலை ஆசிரியர்கள் குழு (பள்ளி அளவில்) மற்றும் மாணவர்கள், பெற்றோர் அடங்கிய, 'வாட்ஸ் ஆப்' குழு ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, இரண்டு ஆசிரியர்கள் பள்ளிகளில், தலைமையாசிரியரே, பெற்றோர் குழுவை நிர்வகிக்கலாம். இரண்டுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இருந்தால், ஒவ்வொரு வகுப்பாசிரியரும், தங்கள் வகுப்பு பெற்றோர் குழுவை நிர்வகிக்க வேண்டும்.
ஆசிரியர்கள் குழுவை தலைமையாசிரியர் நிர்வகிக்க வேண்டும். அதில், தொடக்க கல்வி இயக்ககத்தில் இருந்து வரும் தகவல்களை அனைத்து மாணவர்களின் பெற்றோருக்கு கொண்டு செல்லவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
https://www.dinamalar.com/news_detail.asp?id=2537928
https://www.dinamalar.com/news_detail.asp?id=2537928

No comments:
Post a Comment
Please Comment