நீட் தேர்வு கல்வி தொலைக்காட்சியில் பயிற்சி வகுப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

நீட் தேர்வு கல்வி தொலைக்காட்சியில் பயிற்சி வகுப்பு

நீட் தேர்வு கல்வி தொலைக்காட்சியில் பயிற்சி வகுப்பு

கொரோனா பொது முடக்கம் காரணமாக நீட் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வாயிலாக மே 20ஆம் தேதி முதல் ஜூலை 20-ஆம் தேதி வரை பயிற்சி அளிக்கப்படுகிறது 

இதற்காக ஆசிரியர்கள் பாடம் எடுக்கும் நேரடி படப்பிடிப்பு அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் நடைபெறுகிறது கொரோனா தொற்று பரவலால்  நாடு முழுவதும் அனைத்து பணிகளும் முடங்கியுள்ளன ஆண்டுதோறும் மார்ச் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட்ட பொதுத் தேர்வுகளும் போட்டித் தேர்வுகளும் கூட தற்போதைய சூழலில் நடத்த முடியாமல் தள்ளிப் போய்க் கொண்டிருக்கின்றன

 பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவடைந்த போதும் கரோனா அச்சத்தால் இறுதி தேர்வுப் பெரும்பாலான மாணவ மாணவியர் எழுத முடியாமல் போனது அவர்களுக்காக வரும் ஜூன் 4-ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது 

இதனை தொடர்ந்து பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணியை அவர்கள் மேற்கொள்வர் மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு நிகழாண்டில் ஜூலை 26ம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது 

இந்நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சி மூலம் அரசு பள்ளியில் பணியாற்றும் வகுப்பு ஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது 

இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்களில் 5 நாள்களுக்கு பாடவாரியாக ஆசிரியர்கள் பயிற்சி கொடுத்து நடத்துகின்றனர் 

தினசரி 2 மணி நேரம் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்பை கல்வி தொலைக்காட்சி வாயிலாக பார்த்து மாணவர்கள் பயன்பெற முடியும் 

ஆசிரியர்கள் வகுப்பு எடுப்பதை நேரடியாக ஒளிப்பதிவு செய்து வருகின்றனர் நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் தேர்வுத்துறை இணை இயக்குனர் பொன் குமார் முதன்மை கல்வி அலுவலர் பெரிய அண்ணன் மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் ஆகியோர் மேற்பார்வையில் புதன்கிழமை தொடங்கி ஐந்து நாட்களுக்கு படப்பிடிப்பு நடைபெறுகிறது 

இதுகுறித்து தமிழக அரசு தேர்வுத்துறை இணை இயக்குனர் திரு குமார் கூறியது :  கல்வி தொலைக்காட்சி 70 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது அரசு பள்ளி மாணவர்களின் நலனுக்காக தொலைக்காட்சியில் அனைத்து வகையிலான பள்ளிக்கல்வித்துறை உயர்கல்வித்துறை நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன 

நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்களை சென்னைக்கு வரவழைத்து அவர்களை பயிற்றுவிப்பதை பதிவு செய்து கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்வோம் 

தற்போது கொரோனா தொற்றால் ஆசிரியர்கள் வரமுடியாத சூழ்நிலையில் அந்தந்த மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று முதன்மை கல்வி அலுவலகத்தில் 5 நாட்களுக்கு படப்பிடிப்பை நடத்துகிறோம் மே 20 முதல் ஜூலை 20 வரையில் இந்த நீட் தேர்வு பயிற்சி வகுப்பு கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யப்படும் என்றார்.

No comments:

Post a Comment

Please Comment