ரூபாய் நோட்டு பொருட்களில் கிருமி நீக்கும் கருவி?
ஊரடங்கு தளர்த்தப் பட்டாலும் கொரோனா வைரஸ் பிடி இன்னும் தளர்ந்த பாடில்லை கொரோனாவின் தாக்கம் இரண்டு ஆண்டுகள் வரை கூட நீடிக்கலாம் என தொற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ள நிலையில் பலரும் தொடக் கக் கூடிய பொருட்கள் மூலம் நோய் பரவுவதைத் தடுப்பது அவசியமாக உள்ளது
இதற்கான ஹைதராபாத்தில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் இரண்டு வகை புற ஊதாக்கதிர் கருவிகளை உருவாக்கி உள்ளனர்
இதில் DRUVS என்ற கருவி மொபைல் லேப்டாப் டேப்லட் போன்ற கருவிகளை சில நொடிகளில் சுத்தம் செய்யும் திறன் கொண்டது
பெட்டி வடிவில் உள்ள DRUVS கருவியின் அருகே கையை கொண்டு சென்றால் அதிலுள்ள உணரிகள் கதவைத் திறக்கும் சுத்தப்படுத்தப்பட வேண்டிய பொருளை உள்ளே வைத்துத் தானே மூடிக்கொள்ளும் வைக்கப்படும் பொருளில் 360 கோணத்திலும் புற ஊதாக் கதிர்களை பாய்ச்சி சுத்தம் செய்த பிறகு தான் அனைந்துவிடும்
அதுபோல க்ளின் நோட் என்ற கருவி ரூபாய் நோட்டுகள் காகிதங்கள் போன்றவற்றை தனித்தனியாக எடுத்து புற ஊதாக் கதிர்களை பாய்ச்சி சுத்தம் செய்யும். சரியான புற ஊதா கதிர்களை 30 வினாடிகளுக்கு மேல் பூசினால் பெரும்பாலான பாக்டீரியாக்களை கொன்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment
Please Comment