மத்திய அரசு, ரிசர்வ் வங்கிக்கு 'நோட்டீஸ்'; கடன் தவணை சலுகை காலத்தில் வட்டி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மத்திய அரசு, ரிசர்வ் வங்கிக்கு 'நோட்டீஸ்'; கடன் தவணை சலுகை காலத்தில் வட்டி

மத்திய அரசு, ரிசர்வ் வங்கிக்கு 'நோட்டீஸ்'; கடன் தவணை சலுகை காலத்தில் வட்டி 

புதுடில்லி : 

கடன் தவணை சலுகை காலத்தில் வட்டி வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கிக்கு 'நோட்டீஸ்' அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடன் தவணை சலுகை தொடர்பாக மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தத்தா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதன் விபரம்: 

மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் கடன் தவணையை செலுத்த முதலில் மூன்று மாதங்களும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் மேலும் மூன்று மாதங்களும் அவகாசம் அளித்துள்ளன. 

ஆனால் இந்த அவகாச காலத்தில் வட்டி கணக்கிடப்பட்டு கடன் தாரரின் கணக்கில் சேர்க்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடன் தவணை செலுத்த சலுகை அளித்து விட்டு அக்காலத்திற்கான வட்டி வசூலிப்பது நியாயமற்றது சட்ட விரோதமானது. 

ஏராளமானோர் ஊரடங்கால் வேலை இழந்துள்ளனர். இந்நிலையில் கடன் தவணை காலத்தில் செலுத்தப்படாத வட்டியை கணக்கிடுவது கூட்டு வட்டி போன்றது. 

இதனால் செலுத்த வேண்டிய கடன் அதிகமாகும். அத்துடன் தவணைக் காலமும் அதிகரிக்கும். எனவே கடன் தவணை சலுகைக் காலத்தில் வட்டி வசூலிக்க தடை விதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

 இந்த மனு நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு முன் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக ஒரு வாரத்தில் பதில் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கிக்கு 'நோட்டீஸ்' அனுப்ப அமர்வு உத்தரவிட்டது.

No comments:

Post a Comment

Please Comment