மயக்க மருந்து தடவிய முகக் கவசம் வழங்கி திருட வாய்ப்பு - பொதுமக்கள் விழிப்புடன் இருக்க காவல் துறை அறிவுரை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மயக்க மருந்து தடவிய முகக் கவசம் வழங்கி திருட வாய்ப்பு - பொதுமக்கள் விழிப்புடன் இருக்க காவல் துறை அறிவுரை

வீடுகளுக்கு வந்து இலவசமாக தருவதாக கூறி மயக்க மருந்து தடவிய முகக் கவசம் வழங்கி திருட வாய்ப்பு பொதுமக்கள் விழிப்புடன் இருக்க காவல் துறை அறிவுரை 
மயக்க மருந்து தடவிய முகக் கவசம் வழங்கி திருட வாய்ப்பு - பொதுமக்கள் விழிப்புடன் இருக்க காவல் துறை அறிவுரை

இலவசமாக தருவதாகக் கூறி வீடு தேடி வந்து மயக்க மருந்து தடவப் பட்ட முகக் கவசத்தை கொடுத்து அணிய வைத்து, சிலர் நூதன திருட் டில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாக போலீஸார் எச்சரித்துள்ளனர். 

  
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: 

அரசு சார்பில் இலவச முகக் கவசங்கள் வீடுகள்தோறும் வழங்கு கிறோம் என்று கூறிக் கொண்டு, குற்றம் செய்யும் எண்ணத்தில் சிலர் வீடுவீடாகச் சென்று மயக்க மருந்து தடவிய முகக் கவசத்தை கொடுக்க வாய்ப்பு உள்ளது. 

பின்னர், அதை அணிய வைத்து சரியாக இருக்கிறதா? என்று சரி பார்க்கும்படி வற்புறுத்தி, அவ்வாறு அணியும்போது அணிந் தவர்கள் மயங்கி விழும் நேரத்தில் அந்த நபர்கள், வீடு புகுந்து திருட்டில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. 

எனவே, பொது மக்கள் எச்சரிக் கையுடனும், விழிப்புடனும் இருக்க வேண்டும். சந்தேக நபர்கள் குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்துக்கோ அல்லது காவல் கட்டுப்பாட்டு அறைக்கோ உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment

Please Comment