பள்ளிகளில் ‘ஷிப்ட்’ முறையை நடைமுறைப்படுத்தலாம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பள்ளிகளில் ‘ஷிப்ட்’ முறையை நடைமுறைப்படுத்தலாம்

சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் பள்ளிகளில் ‘ஷிப்ட்’ முறையை நடைமுறைப்படுத்தலாம் அரசுக்கு ஆசிரியர் அமைப்பு யோசனை 

சமூக இடைவெளியை கடைபிடிக் கும் வகையில் பள்ளிகளில் ‘ஷிப்ட்’ முறையை நடைமுறைப்படுத்த லாம் என்று அரசுக்கு ஆசிரியர் அமைப்பு யோசனை தெரிவித்துள் ளது. 

 இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலை வர் சா.அருணன், பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பனுக்கு அனுப்பியுள்ள மனு: 

 மாணவர்கள் நலன் தொடர்பாக, வரும் கல்வி ஆண்டில் நடை முறைப்படுத்த வேண்டிய ஒருசில யோசனைகளை எங்கள் கூட்ட மைப்பு சார்பில் முன்வைக்கிறோம். 

 சுழற்சி முறையில்... 

பள்ளிகளில் சமூக இடை வெளியைக் கடைபிடிக்கும் வகை யில் சுழற்சி முறையை நடை முறைப்படுத்தலாம். தொடக்கப் பள்ளிகளில் எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை ஒருநாளும், அடுத்த நாள் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களை வர வழைக்க வேண்டும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு மாணவர்கள் ஒருநாளும், 9, 10-ம் வகுப்பு மாணவர்களை அடுத்த நாளும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களை மறுநாளும் வர வழைக்கலாம். வகுப்பறையில் 15 மாணவர் கள் அமரும் விதமாக இருக்கை களை அமைக்க வேண்டும். மாண வர்களுக்கு இலவசமாக முகக் கவசம் வழங்க வேண்டும். கை களை அடிக்கடி சுத்தம் செய்ய சோப்பு, கிருமிநாசினி வழங்க வேண்டும். 

  பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 பாடத்திட்டத்தில் தேவையற்ற பாடங்களை நீக்கி, மாணவர் களை தேசிய நுழைவுத்தேர்வு களை எதிர்கொள்ளும் வகையில் மாற்றியமைக்க வேண்டும். 

போட்டித் தேர்வுகளில் இருப்பதை போன்று கொள்குறி வினாக்கள் அதிக அளவில் இருக்குமாறு வினாத்தாளை வடிவமைக்க வேண்டும். தேவைப்படும் சூழலில் ஆன்லைன் கல்வியை பயன் படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment