தமிழகத்தில் தற்போதைய சூழலில்
ஊரடங்கை ஒரே நேரத்தில் முழுமையாக தளர்த்த முடியாது
முதல்வருடனான ஆலோசனைக்கு பிறகு மருத்துவ நிபுணர்கள் தகவல்
சென்னை
முதல்வர் பழனிசாமியுடன் ஆலோ சனை நடத்திய மருத்துவ நிபுணர் குழுவினர், ‘தமிழகத்தில் தற்போதுள்ள சூழலில் ஊரடங்கை ஒரே நேரத்தில் முழுமையாக தளர்த்த முடியாது’ என்று தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் அரசு எடுத்த நட வடிக்கைகள் காரணமாக கரோனா வைரஸ் தொற்று பரவல் குறைந்து வந்தது.
ஆனால், தற்போது வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண் ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 28-ம் தேதி 121 பேருக்கும், 29-ம் தேதி 104 பேருக்கும் தொற்று உறுதியானது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் 161 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட் டுள்ளது. குறிப்பாக, சென்னையில் மட் டும் கடந்த ஒருவாரத்தில் தொற்று எண் ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித் துள்ளது.
சென்னையை ஒட்டியுள்ள செங்கல்பட்டிலும் காஞ்சிபுரத்திலும் தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்நிலையில், மே 3-ம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு தரப்பினருடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
கடந்த 28-ம் தேதி 12 ஒருங்கிணைப்பு குழுக்களைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளுடனும், 29-ம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடனும் ஆலோ சனை நடத்தினார். அதன்பின், பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.
அதைத் தொடர்ந்து, வைரஸ் பரவு வதை கட்டுப்படுத்தவும், சிகிச்சை அளிப்பது தொடர்பான வழிமுறைகளை பரிந்துரைக்கவும் அமைக்கப்பட்ட 19 மருத்துவர்களைக் கொண்ட நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தலை மைச் செயலர் கே.சண்முகம், சுகா தாரத் துறை செயலர் பீலா ராஜேஷ், மருத்துவ நிபுணர் குழுவின் தலைவர் டாக்டர் ரகுநந்தன் மற்றும் இந்திய மருத் துவ ஆராய்ச்சி கவுன்சிலின்கீழ் இயங் கும் தேசிய தொற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவர் பிரதீப் கவுர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆலோசனைக்குப் பிறகு செய்தி யாளர்களிடம் மருத்துவர் பிரதீப் கவுர் கூறியதாவது:
இன்றைய ஆலோசனைக் கூட்டத் தில் முதல்வரிடம் சில பரிந்துரைகளை அளித்துள்ளோம். கடந்த 2 வாரங் களாக தமிழகத்தில் கரோனா பரிசோத னைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப் பட்டுள்ளது. அதன் காரணமாக அதிக அளவிலான பாதிப்பும் கண்டறியப் பட்டுள்ளது. வைரஸ் தொற்று பாதிப்பை பொறுத்தவரை அனைத்து மாவட்டங் களிலும் சமமாக இல்லை. சில மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
பல மாவட்டங்களில் குறைந்து வருகிறது. இதனால், தொற்று பரவல் நிலையும் எல்லா பகுதிகளிலும் ஒரே மாதிரியாக இல்லை.
தற்போது எடுக்கப்பட்டுவரும் நட வடிக்கைகள் அடிப்படையில் பார்க்கும் போது, மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் ஊரடங்கை தளர்த்த முடி யாது.
ஊரடங்கை முழுமையாக தளர்த் தும் நிலைமையும் தற்போதைக்கு இல்லை.
ஆனால், தொற்றுநோயியல் ரீதியாக வும், சுகாதார திட்டம் அடிப்படையிலும் சில முக்கியமான விஷயங்களை அர சுக்கு பரிந்துரைத்துள்ளோம்.
அதன் படி, சில பகுதிகளில் ஊரடங்கை தளர்த்தலாம் அல்லது தொடரலாம். இது தொடர்பாக அரசுதான் முடிவெடுக் கும். தொற்று நிலவரம் குறித்து கிடைக்கும் தரவுகள், நாங்கள் தெரிவித் துள்ள முக்கிய விஷயங்கள் அடிப்படை யில் அரசு அறிவிப்புகளை வெளி யிடும்.
ஆனால், ஊரடங்கை முழுமை யாக தளர்த்த முடியாது. படிப்படியாகத் தான் தளர்த்த முடியும்.
அப்படி தளர்த்தப்பட்டாலும் சமூக இடைவெளி மிகவும் முக்கியமானது. பொது இடங்களுக்கு செல்லும்போது சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். கையை சுத்தப் படுத்துவதை தொடர்வதுடன், பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது மிகவும் அவ சியம்.
மொத்தமாக நம் வாழ்க்கை முறை யையே மாற்ற வேண்டும். ஏனெனில், இந்த வைரஸ் நம்முடன் சிறிது நாட் களுக்கு மட்டும் இருக்கப் போவ தில்லை. பல நாட்களுக்கு தொடர்ந்து இருக்கப் போகிறது. அப்படியிருக்கும் போது ஒருநாள், இரண்டு நாள் மட்டும் பாதுகாப்பாக இருந்தால் போதாது.
ஒட்டுமொத்தமாக நம் வாழ்க்கை முறையை மாற்றி, சில நடவடிக்கை களை தொடர வேண்டும்.
முக்கியமாக எளிதில் பாதிக்கப்படும் குழந்தைகள், வயதானவர்களுடன் அதிகமாக பேசு வதை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல் புற்றுநோய், சிறுநீரக கோளாறு, நீரிழிவு நோய் உள்ளவர்கள் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை எடுத்தால் அவர்களுக்கான அபாயம் குறையும்.
அதிக அளவில் மக்கள் கூடும் நிகழ்வு களுக்கு அனுமதிக்க முடியாது.
தற் போது ஊரடங்கு உள்ளதால் தனிப்பட்ட முடிவுகள் எடுக்க வாய்ப்பில்லை. ஆனால், சுகாதார திட்ட நடவடிக்கைகள் தொடரப்படும். அதேநேரம் கண் காணிப்பு, தொடர்பு கண்டறிதல், தொற்று கண்டறியப்பட்டவர்களை தனிமைப்படுத்துதல் மற்றும் தனிமைப் படுத்தும் மையங்களில் மேற்கொள்ளப் படும் நடவடிக்கைகள் தொடரும்.
இவற் றுக்கெல்லாம் சமூக அளவில் அனை வரும் ஒத்துழைக்க வேண்டும். நாம் எல் லோரும் இணைந்துதான் இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Please Comment