கொரோனாவால்
கண் மருத்துவர்களுக்கு உளவியல் பாதிப்பு அதிகம்
ஆய்வில் தகவல்
கொரோனாவால்
கண் மருத்துவர்களுக்கு உளவியல் பாதிப்பு அதிகம்
ஆய்வில் தகவல்
புதுடெல்லி, மே.22-
ஊரடங்கின்போது, கண் மருத்துவர்கள் மற்றும் பயிற்சி கண் மருத்துவர்களிடம் கொரோனா ஏற்படுத்திய உளவியல் ரீதியான பாதிப்பு குறித்து எல்.வி.பிரசாத் கண் மருத்துவ நிலையம், அகில இந்திய கண் மருத்துவ சங்கத்துடன் இணைந்து ஆய்வு நடத்தியது.
இதில், கண் நோயாளிகளின் கண், முகம் ஆகியவற்றுடன் நெருக்கமாக பணியாற்ற வேண்டி இருப்பதால், கண் மருத்துவர்கள் உளவியல் ரீதியாக அடைந்த பாதிப்பு மிக அதிகம் என்று தெரிய வந்துள்ளது.
எனவே, கொரோனா சிகிச்சையில் ஈடுபட்டுள்ளவர்கள் மட்டுமின்றி, அனைத்து துறை சுகாதார பணியாளர்களின் மனநிலையிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
No comments:
Post a Comment
Please Comment