பி.காம்., பட்டத்திற்கு பி.சி.எஸ்., இணை?
பி.சி.எஸ்., படிப்பு, பி.காம்., பட்டத்திற்கு இணையானது என, சான்று வழங்க கோரிய வழக்கில், மதுரை காமராஜ் பல்கலை பரிசீலிக்க, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
மதுரை, திருநகர் கலைவாணி தாக்கல் செய்த மனு:
மதுரை தெற்கு மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில், கணக்கு உதவியாளராக பணிபுரிகிறேன். என் கணவர், 2015ல் இறந்தார். அலுவலகத்தில் கணக்கு மேற்பார்வையாளர் பணி, காலியாக உள்ளது.
அப்பதவிக்கு, பி.காம்., அல்லது அதற்கு இணையான பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். நான், பி.சி.எஸ்., - பேச்சிலர் ஆப் கார்ப்பரேட் செகரட்ரிஷிப் - மூன்றாண்டு பட்டப் படிப்பை, மதுரை காமராஜ் பல்கலை கீழ் உள்ள கல்லுாரியில் படித்துள்ளேன். பி.சி.எஸ்., படிப்பு, பி.காம்., படிப்பிற்கு இணையானது என, 2018ல், தமிழக உயர்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசாணைப்படி, பி.சி.எஸ்., படிப்பு, பி.காம்., படிப்பிற்கு இணையானது என, சான்று வழங்க காமராஜ் பல்கலைக்கு உத்தரவிடவேண்டும்.
இவ்வாறு, மனுவில் கோரியிருந்தார்.
நீதிபதி, ஜெ.நிஷா பானு, ''மனுவை, மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் பரிசீலித்து, தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,'' என்றார்.
No comments:
Post a Comment
Please Comment