கொரோனாவை கேரளா வென்றது எப்படி: புத்தகம் எழுதிய பள்ளி ஆசிரியை
திண்டுக்கல்:'கொரோனாவை கேரளா வென்றது எப்படி என்பது பற்றி இடுக்கி மாவட்டம்
ராமக்கல் மேடு பள்ளி ஆசிரியை புத்தகம் எழுதியுள்ளார்.
இந்தியாவில் முதலில் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது கேரளாவில்தான்.
இதுவரை அங்கு 485 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலி, இங்கிலாந்து நாட்டினர் உட்பட 359 பேர்
குணமாகியுள்ளனர். மூன்று பேர் மட்டும் பலியாகியுள்ளனர். கொரோனா தடுப்பு
நடவடிக்கையில் கேரளா முன்னுதாரணமாக உள்ளது. கொரோனாவை எளிதாக வெல்ல
பரிசோதனைகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முக்கிய காரணம்.
தொற்று நோயை எதிர்கொள்ள தனி வரைமுறைகள் கேரளாவில் உள்ளன.
கேரளா
கொரோனாவை வென்றது குறித்து 'கொரேனேயில் நின்னு அதிஜீவனத்திலேக்கு' எனும் தலைப்பில் பள்ளி
ஆசிரியைஷெரின் சாக்கோ புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளார்.
ஆசிரியை ஷெரின் சாக்கோ கூறுகையில், 'கொரோனா போராட்டத்தில் பங்கேற்ற டாக்டர்கள், செவிலியர்கள், போலீஸ், சுகாதாரத்துறைக்கு நன்றி தெரிவிக்கவும், கொரோனாவை எப்படிகட்டுப்படுத்தினோம் என்பதை மற்ற நாடுகளுக்கு தெரிவிக்கவும் ஊரடங்கு காலத்தில் புத்தகம் எழுதினேன்.
இதற்காக, கொரோனா பாதித்த நாடுகளில் பணியாற்றும் டாக்டர்கள்,
செவிலியர்கள், மக்கள் ஆகியோரை தொடர்பு கொண்டேன். கேரள சபாநாயகர்
ஸ்ரீராமகிருஷ்ணன் புத்தகத்தை வெளியிட்டார்' என்றார். இவர் ஏற்கனவே நான்கு புத்தகங்கள், இருபது பக்தி பாடல்கள் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment
Please Comment