பொதுத் தேர்வு : மாணவர்களுக்கான சில அறிவுரைகள் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பொதுத் தேர்வு : மாணவர்களுக்கான சில அறிவுரைகள்

பொதுத் தேர்வு : மாணவர்களுக்கான சில அறிவுரைகள் 
பொதுத் தேர்வு : மாணவர்களுக்கான சில அறிவுரைகள்

தேர்வு நெருங்கும் சமயத்தில், நமது உடல்நலனை நல்லபடியாக பராமரித்துக் கொள்வது முக்கியமானதென்றால், உடலில் காயமேற்படுத்தக்கூடிய வேறெந்த காரியத்தையும் செய்வதை தவிர்ப்பதும் நல்லது. 


கிராமப்புற மாணவர்கள் தவிர, நகர்ப்புற மாணவர்களும் சேர்ந்து, வேறுசில விஷயங்களையும் தவிர்க்க வேண்டும். 

கூர்மையான ஆயுதங்களை வைத்து ஏதேனும் வேலை செய்தல், பைக்கில் சாகச பயணம் அல்லது வேகமாக செல்லுதல், 

நெருப்பு தொடர்பான வேலைகளில் ஈடுபடுதல், தேவையற்ற அல்லது பாதுகாப்பற்ற இடங்களுக்கு செல்லுதல் 

ஆகியவற்றைத் தவிர்க்கவும். பொதுவாக, கிராமப்புற மாணவர்கள், கிணற்றில் டைவ் அடித்து குதித்து குளிப்பது, 

மரம் ஏறுவது, 

முள் வெட்டுவது மற்றும் விறகு வெட்டுவது போன்ற சில காரியங்களில் வழக்கமாக ஈடுபடுவார்கள். 

அவை, அந்த மாணவர்களுக்கு வழக்கமான ஒன்றுதான் என்றாலும், எதிர்பாராத சில நேரங்களில், அத்தகைய செயல்களில், விபத்துக்களும் நேர்வதுண்டு. 

எனவே, தேர்வின்போது, அதுபோன்ற செயல்களை(அவை வழக்கமான ஒன்றாக இருப்பினும்கூட) தயவுசெய்து சில நாட்களுக்கு ஒத்தி வைக்கவும். 

ஏனெனில் தேர்வின்போது, கண்களும், கைகளும் மிக முக்கியமானவை. உங்களின் நடவடிக்கைகளால், அவற்றுக்கு பாதிப்பு ஏற்படுமானால், அது தேர்வையே பாதித்துவிடும். 

உங்களின் விரல் நகங்களை, பிளேடு பயன்படுத்தாமல், நகவெட்டிக் கொண்டு வெட்டி, தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்.

தேர்வில் கலந்துகொண்டு நன்றாக எழுதி நல்ல மதிப்பெண்களோடு வெற்றிப் பெற வாழ்த்துகள்

No comments:

Post a Comment

Please Comment