Todays Gadget வரலாற்றுக் கதை உலர் சலவை Dry Cleaning - ThulirKalvi Blogs

Latest

Search This Site

Todays Gadget வரலாற்றுக் கதை உலர் சலவை Dry Cleaning

Todays Gadget வரலாற்றுக் கதை உலர் சலவை Dry Cleaning 

 கந்தையானாலும் கசக்கிக் கட்டு’ என்பது முன்னோர் வாக்கு. நம் முன்னோர்கள் காலத்தில் ஆடைகளை தூய்மையாக்கி, வெள்ளாவியில் வைத்து வெளுப்பதன் மூலம் துணிகளில் உள்ள அழுக்கு, எண்ணெய் பிசுக்கு ஆகியவை நீக்கப்பட்டது. நாகரிகம் வளர வளர, ஆடைகளின் அழுக்கை போக்கவும், மனிதனின் போராட்டத்தை குறைத்து உழைப்பை லேசாக்க சோப்பு தோன்றியது. அதன்பிறகு டிடர்ஜெண்ட் எனப்படும் சலவைப் பொடி பயன்பட்டது. கடந்த 2 தலைமுறையாக இந்த சலவை முறைகள் அதிகமாகின.


அறிவியல் அறிவோம் : நாம் கண்ணை இமைப்பது ஏன்?





மேலை நாடுகளில் துணிகளை வெளுத்து தர லாண்டரிகள், சலவைத் தொழிற்சாலைகள் தோன்றின. ஆனால் பட்டு மற்றும் நேர்த்தியான செயற்கை இழைகளினால் உருவான ஆடைகளை இந்த டிடர்ஜெண்டுகளின் சலவை நாசமாக்கியது. ஆகவே இத்தகைய உடைகளை வெளுக்க ஒரு புதிய முறை தேவைப்பட்டது. அதற்காக கையாளப்படும் சலவை முறையே ‘டிரைவாஷிங்’ அல்லது ‘டிரைகிளீனிங்’ என்று அழைக்கப்படும் ‘உலர் சலவை’யாகும். இதை ‘பெட்ரோல் வாஷ்’ என்றும் கூறுவார்கள். 

  பெட்ரோல் வாஷ் முறையை கண்டுபிடித்தது ஒரு பிரெஞ்சுக்காரர். அவரது பெயர், ஜின் பாப்டிஸ்ட் ஜாலி. இவர் இதை கண்டுபிடித்தது ஒரு எதிர்பாராத நிகழ்ச்சி. இந்த ஜாலி என்பவர் ஒரு சாயத் தொழிலாளி. 

  இவருடைய வீட்டு வேலைக்காரி, தவறுதலாக விளக்கை கவிழ்க்க, அதிலுள்ள சுத்திகரிக்கப்பட்ட டர்பண்டைன் அழகான மேஜை விரிப்பில் கொட்டிவிட்டது. பயந்துபோன அவள், தன் செயலை மறைக்க அவசர அவசரமாக துடைத்து தேய்த்தாள். 

  என்ன ஆச்சரியம்.. மேஜை விரிப்பின் அழுக்கெல்லாம் அகன்று பளீர் என்று மின்னத் தொடங்கியது. 

Todays Gadget வரலாற்றுக் கதை  உலர் சலவை Dry Cleaning

  சாயத் தொழிலாளியான ஜாலிக்கு, டர்பண்டைன் செய்த ரசாயன மாற்றம் பற்றி ஏதும் தெரியாது. ஆனால் மேஜைவிரிப்பு சோப்பைவிட பிரமாதமாக வெளுத்திருப்பதை கண்டதும், அதைக்கொண்டு புதிய சலவை முறையை உருவாக்கலாம் என்று தெரிந்து கொண்டார். 



அவ்வளவுதான் சிறிது காலத்தில் பிரான்ஸ் முழுவதும் இந்த டிரைகிளீனிங் பிரபலமாகி, கால்வாயைக் கடந்து பிரிட்டனுக்குள்ளும் புகுந்தது. 1854-ல் செயின்ட் பால்கதீட்ரலைச் சுற்றி பத்து மைல் வட்டாரத்தில் 3 ஆயிரத்துக்கும் மேலான சாயம் போடுபவர்களும், சலவைக்காரர்களும் டிரைகிளீன் முறையில் இருந்தார்கள். அந்த அளவுக்கு இந்த டிரைகிளீனிங் பிரபலமாகியது. 

Todays Gadget வரலாற்றுக் கதை  உலர் சலவை Dry Cleaning


  அதன்பிறகு இதில் பல்வேறு மேம்பாடுகள் ஏற்பட்டுக் கொண்டே வந்தன. சில பெட்ரோலிய பொருட்கள் சுத்தம் தந்தாலும் சிறிது வாடை வீசியது. சில நேரங்களில் பெட்ரோல் பொருட்கள் தீப்பற்றும் வாய்ப்பு இருந்தது. 1897-ல் பெட்ராக்ளோரைடு என்பதை பயன்படுத்தி துணியை வெளுத்தார். அது பளிச்சென்று இருந்தது. இது நெருப்பு பிடிக்காது, வாசனை வராது என்பது உறுதியானது. ஆனால் இதை முகர்ந்தால் உயிருக்கே ஆபத்து என்று தெரியவந்தது. 



  இதையடுத்து 1918-ல் டிரைகுளோரோதலீன் என்ற ஒரு பொருளைக் கண்டார்கள். 1930 வரை டிரை கிளீனுக்கு இந்த பொருளே புழக்கத்தில் இருந்தது. அதன்பிறகு விஞ்ஞானம் வளர வளர பல புதிய கரைப்பான்கள் தோன்றி அதன் இடத்தைப் பிடித்தன. இன்று பொதுவாக எல்லோராலும் டிரை கிளீனுக்கு பயன்படுத்தப்படும் பொருள், தேக ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்காத, தீப்பிடிக்கும் என்ற பயமில்லாத ‘பெர்குளோரோதலீன்’ என்பதாகும்.

No comments:

Post a Comment

Please Comment