இணையவழி சிறப்பு வகுப்பு 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் ஆர்வம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

இணையவழி சிறப்பு வகுப்பு 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் ஆர்வம்

இணையவழி சிறப்பு வகுப்பு 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் ஆர்வம் 

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் நடைபெற்று வரும் ஊரடங்கு கால இணையவழி சிறப்பு வகுப்பு களில் 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் ஆர்வமுடன் பயில்கின்றனர். தனியார் பள்ளி மாணவர் களுக்கு இணையாக மாநகராட்சி பள்ளி மாணவர்களையும் தயார் செய்ய வேண்டியுள்ளது. 

இதற் காக மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர் களுக்கு ‘டெக் ஃபார் இந்தியா’ அமைப்பு மூலம் பயிற்சி வழங்கப் பட்டுள்ளது. 2020-21-ம் கல்வி ஆண் டில் 10-ம் வகுப்புக்கு வந்துள்ள 6,800 மாணவர்களுக்கு ஊரடங்கு கால இணையவழி வகுப்புகள், கடந்த ஜூன் 1 முதல் நடைபெற்று வருகின்றன. 

அவர்களுக்காக 4,890 ஸ்மார்ட் கைபேசிகளை ஃபாக்ஸ்கான் நிறுவனம் இலவச மாக வழங்கியுள்ளது. மேலும் 1,910 கைபேசிகள் வாங்க திட்டமிடப்பட் டுள்ளது. 12-ம் வகுப்பு மாணவர் கள் 5,200 பேருக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள மடிகணினிகள் வழியாக இணையவழி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. 

மாநகராட்சி பள்ளிகளிலேயே சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு 40 நிமிடங்கள் கொண்ட சிறப்பு வகுப்புகள், வீடியோவாக பதிவு செய்யப்படுகின்றன. அவை மாநக ராட்சியின் GCC Education என்ற யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டு, அதன் இணைப்பு கள் வாட்ஸ்அப் மூலமாக மாணவர் களுக்கு அனுப்பப்படுகின்றன. 

ஜூன் மாதத்தில் தினமும் எந்த பாடத்தை எத்தனை மணிக்கு நடத்த வேண்டும் என்ற பாடத் திட்டமும் அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

மேலும், வாட்ஸ்அப் மூலமாக மாணவர்களுக்கு வீட்டுப் பாடங் களும் வழங்கப்படுகின்றன. மாநக ராட்சியின் இந்த முயற்சி மாணவர் கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வகுப்பு நேரத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளளனர்.

No comments:

Post a Comment

Please Comment