10ம் வகுப்பு பொதுத்தேர்வை 2 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்- ஐகோர்ட்டில் வழக்கு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

10ம் வகுப்பு பொதுத்தேர்வை 2 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்- ஐகோர்ட்டில் வழக்கு

10ம் வகுப்பு பொதுத்தேர்வை 2 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்- ஐகோர்ட்டில் வழக்கு



தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 2 மாதங்களுக்கு ஒத்திவைக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15ம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும், பேருந்து வசதிகள் செய்து தரப்படும் என்றும் அரசு கூறி உள்ளது. 


இந்நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 2 மாதங்களுக்கு ஒத்திவைக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்க தலைவர் பக்தவச்சலம் மனு தாக்கல் செய்துள்ளார். 


அதில், ‘ஆசிரியர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் பொதுத்தேர்வை அரசு அறிவித்துவிட்டது. கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள இந்த சூழ்நிலையில் எத்தனை சுகாதார பணியாளர்கள் பணியில் ஈடுபடுவார்கள் என கூறவில்லை. தற்போதைய நிலையில் மாணவர்கள் தேர்வு எழுதுவது கடினம் என்பதால், 15 நாட்கள் பயிற்சி வகுப்பு நடத்த உத்தரவிட வேண்டும். 

தேர்வை 2 மாதங்களுக்கு ஒத்திவைக்கும்படி உத்தரவிடவேண்டும்’ என மனுதாரர் கூறியிருந்தார்.


No comments:

Post a Comment

Please Comment