10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ஹால் டிக்கெட் வழங்கும் பணி தொடக்கம்
10-ம் வகுப்பு
பொதுத்தேர்வு எழு தும் மாணவர்களுக்கு ஹால்டிக் கெட் வழங்கும் பணிகள் நேற்று
தொடங்கின.
ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்ட 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15
முதல் 25 வரை நடைபெறவுள்ளது.
இதேபோல், பிளஸ் 1 வகுப்பில் மீதமுள்ள பாடங்களுக்கு
ஜூன் 16-ம் தேதியும்,
பிளஸ் 2 இறுதித் தேர்வில் பங்கேற்காத மாணவர் களுக்கு ஜூன்
18-ம் தேதியும் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
இதற்கான ஹால் டிக்கெட்
www.dge.tn.gov.in என்ற இணையதளத் தில் நேற்று வெளியிடப்பட்டது.
பள்ளிகளிலும்
ஹால்டிக்கெட் வழங்கப்படுகிறது. மேலும், சென்னை உட்பட அனைத்து மாவட் டங்களிலும்
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மற்றும் வீட்டு தனிமைப்படுத்துதலில் உள்ள
மாணவர்களுக்கு அவர் களின் வீடுகளுக்கே சென்று ஹால் டிக்கெட்கள் வழங்கப்பட்டு
வருகின்றன
No comments:
Post a Comment
Please Comment